இந்தியா எங்கள் உறவுக்கார நாடு.. எங்களுக்குள் பேசியே தீர்த்துக் கொள்வோம் : திடீர் U - TURN அடித்த நேபாளம்.!
இந்தியா எங்கள் உறவுக்கார நாடு.. எங்களுக்குள் பேசியே தீர்த்துக் கொள்வோம் : திடீர் U - TURN அடித்த நேபாளம்.!

இந்திய ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த மே 8 ஆம் தேதி அன்று உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தர்ச்சுலாவுடன் லிபுலேக் பாஸை இணைக்கும் 80 கி.மீ நீளமுள்ள மூலோபாய சாலையை திறந்து வைத்தார். நேபாள எல்லை அருகே திறந்து வைக்கப்படும் இந்த சாலை தங்கள் பிரதேசத்தை கடந்து செல்வதாகக் கூறி நேபாளம் எதிர்ப்பு தெரிவித்தது.
அடுத்து, இந்தியாவின் உத்தரகண்ட் எல்லைப் பகுதியில் உள்ள லிபுலேக், கலபாணி மற்றும் லிம்பியாதுரா பகுதிகளை உரிமை கொண்டாடி அப்பகுதிகள் அடங்கிய புதிய வரைபடத்துக்கு நேபாள நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இதை அடுத்து, இந்தியா "இது நேபாளத்தின் செயற்கையான விரிவாக்கம் என்றும், இது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றும் கூறியது.
மேலும் எல்லைப்பகுதிகளில் இருந்து இந்திய இராணுவம் வாபஸ் பெறவேண்டுமென்றும் அங்கு தனது படைகளை நிறுத்தப் போவதாகவும் நேபாளம் கொக்கரித்தது.
நேபாளம் சீனாவின் தூண்டுதல்களால்தான் எப்போதும் இல்லாமல் இப்படி நடந்து கொள்வதாக கூறப்பட்டது.
ஆனால் நேபாளத்தின் செய்கைகளை பொறுத்துக் கொண்ட இந்தியா நேபாளம் குறித்து எந்த கடுமையான வார்த்தைகளையும் இது வரை பயன்படுத்தவில்லை.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு இந்திய அரசு தன்னுடை அரசை கலைக்க முயல்வதாக நேபாள பிரதமர் சர்மா ஒலி குற்றம் சாட்டியதுடன் இந்தியாவுக்கு எதிராக பேசினார். இந்நிலையில் நேபாளத்தில் இப்போது ஆளும் கம்யூனிஸ்டு கட்சிக்குள்ளேயே பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு பிரிவினர் சீனாவுக்கு ஆதரவாக உள்ளதாகவும், இன்னொரு பிரிவினர் இந்தியாவுக்கு எதிராக நடந்து கொள்ளக் கூடாது என்றும், மீறினால் அரசு கவிழ்ந்துவிடும் என எச்சரித்ததாகவும் செய்திகள் வந்தன.
இந்த நிலையில், நேபாள வெளியுறவு மந்திரி பிரதீப் குமார் கியாவாலி நேற்று பாராளுமன்ற கூட்டத்தில் பேசுகையில் "எங்களுக்குள் எல்லை தகராறு கிடையாது . ஊடகங்கள்தான் பெரிது படுத்துகின்றன, இது இருதரப்பு உறவுகளின் பிற செயல்பாடுகளை பாதிக்காது என்று நம்புவதாகவும், இராஜதந்திர முயற்சிகள் மூலம் சில கருத்து வேற்றுமைகளை தீர்க்க முடியும்'' என்றும் கூறினார்.
மேலும், ''நேபாளம்-இந்தியா உறவுகள் பல பரிமாணங்களைக் கொண்டவை. இந்த இயற்கையான உறவுகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் கொண்ட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது''என்று கியாவாலி பாராளுமன்றக் கூட்டத்தில் கூறினார்.
மேலும், இந்த கருத்து வேறுபாடுகளை தீர்க்க இந்தியாவுடன் தனது அரசாங்கம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது என்றும், நாங்கள் இந்தியாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சினையை தீர்க்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், அதை நாங்கள் தீர்க்க முடியும் என்று நம்புகிறேன். நாங்கள் சர்ச்சையைத் தீர்ப்போம், ஆனால் ஆத்திரமூட்டல்கள் மற்றும் உணர்ச்சிகளின் மூலம் அல்ல" என்று கியாவாலி மேலும் உணர்ச்சி வசப்பட்டு கூறினார்.
https://www.newindianexpress.com.