உதயநிதியின் சினிமாவை மிஞ்சும் அளவு காமெடி நிறைந்த உதயநிதியின் அரசியல்.! #UdhayanithiStalin #DMK
உதயநிதியின் சினிமாவை மிஞ்சும் அளவு காமெடி நிறைந்த உதயநிதியின் அரசியல்.! #UdhayanithiStalin #DMK

முதலில் ஒரு பொய்யை கூறுவது பின் அதை மறுத்து சமாளித்து அறிக்கை வெளியிடுவது என உதயநிதி'யின் அரசியல் வாழ்க்கையில் காமெடிக்கு பஞ்சமில்லை, அவரது சினிமா படங்களை மிஞ்சும் அளவிற்கு காமெடி காட்சிகள் நிறைந்ததாக இருக்கிறது உதயநிதியின் அரசியல் வாழ்க்கை.
சமீபத்தில் அவர் ஒரு ட்விட்டர் பதிவிட்டிருந்தார்.
அதில்,
"இந்திய அளவில் தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் கொரோனாவால் பலியாவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பொதுமக்களின் கொரோனா மரணங்களைத் தவணை முறையில் வெளியிடும் அடிமை அரசு, மருத்துவர்கள் நிலை குறித்தும் விளக்கியாக வேண்டும். எடுபிடிகளின் இந்த மெத்தனம் தமிழகத்துக்கே தலைகுனிவாகும்'' என உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக கூறி டேட்டாவை பகிர்ந்து இருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர்கள் உதயநிதி சொன்ன தகவல் நம்பகத்தன்மை அற்றவை. அது அதிகாரப்பூர்வமற்ற அறிவிப்பு. நாங்கள் இதனை மறுக்கிறோம் எனக் கூறி அறிக்கை வெளியிட்டனர். உதயநிதியின் இந்த பதிவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்திருந்தார். இதனால் கடும் எதிர்ப்பு உதயநிதிக்கு கிளம்பிய நிலையில் அதனை சமாளிக்கும் விதமாக உதயநிதி மற்றொரு ட்விட் செய்திருந்தார்.
அதில், சமாளிக்கும் விதமாக
கொரோனோ பணியில் மருத்துவர்கள் இறந்த கணக்கு பொய்யாக இருக்கவே நான் விரும்புகிறேன் என பம்மலுடன் பதிவிட்டிருந்தார்.
உதயநிதியின்
மேற்கூறிய இந்த அவசர செயல்களில் அரசியல் அரங்கில் காமெடியனாக உதயநிதி மாறி வருகிறார் என பார்வையாளர்கள் சிரிக்கிறார்கள்.