"அத்தை வேண்டாம், நானே பாத்துக்குறேன்!" ஜஸ்ட் லைக் ஒதுக்கிய உதயநிதி - அப்செட்டில் கனிமொழி #UdhayanithiStalin #Kanimozli #DMK
"அத்தை வேண்டாம், நானே பாத்துக்குறேன்!" ஜஸ்ட் லைக் ஒதுக்கிய உதயநிதி - அப்செட்டில் கனிமொழி #UdhayanithiStalin #Kanimozli #DMK

தி.மு.க தலைமை எங்களுக்குள் ஒற்றுமை உள்ளது, எங்களை பிரிக்க முடியாது என வெளியில் பறைசாற்றினாலும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் தி.மு.க'வில் நடக்கும் குடும்ப சண்டைகளும், உட்கட்சி பூசல்களும் வந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் சமீபத்திய குடும்ப சண்டை அத்தை கனிமொழி மற்றும் மருமகன் உதயநிதி இடையிலானது. தி.மு.க'வில் கனிமொழி'க்கொன்று ஒரு தனி செல்வாக்கு உண்டு அது நாடறிந்த விஷயம். மாநில அரசியலிலும் சரி, மத்திய மந்திரிசபையிலும் பதவியில் இருந்துள்ளார். மேலும் கலைஞரை நன்கு அறிந்தவர்கள் கூட கனிமொழிதான் கலைஞரின் அரசியல் வாரிசு என்பர் காரணம் கலைஞரின் அரசியல் சாயல் கனிமொழியிடம் பார்க்கலாம்.ஆனால் நடப்பதோ ஸ்டாலின் தலைமை அல்லவா? சொந்த அண்ணன் மு.க.அழகிரியையே அரசியல் ஆதாயத்துக்காக ஒதுக்கி வைத்தவர் என்ன இருந்தாலும் கனிமொழி மாற்றான்தாய் மகள் இல்லையா அவரை மட்டும் என்ன அதிகாரத்தில் வைத்து அழகுபடுத்தியா பார்ப்பார்? அழகிரி'யை தனக்காக ஒதுக்கியது போல கனிமொழியை தன் மகனை முன் நிறுத்தி ஒதுக்க பார்க்கிறார்.
இதற்கு சமீபத்திய நிகழ்வுகள் உதாரணம். டெல்லி JNU'ல் மாணவர்கள் மத்தியில் கலவரம் ஏற்பட்ட பொழுது கனிமொழிதான் அங்கே சென்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றி தி.மு.க சார்பில் ஆதரவுக்கரம் நீட்டி வந்தார். இதனால் அவரது புகழ் கணிசமாக உயர்ந்தது,உடனே இரு தினங்கள் கழித்து அதே தி.மு.க சார்பில் உதயநிநி சென்று ஆதரவு கரம் நீட்டி வந்தார் போராட்டகாரர்களே "ஏன்டா ஒரே கட்சில ரெண்டு ஆளுங்க வர்றாங்க" என குழம்பும அளவிற்க்கு இருந்தது தி.மு.க'வின் ஆதரவு கரம்.
அடுத்த சம்பவம் சாத்தான்குளம், இந்த சம்பவத்தில் முதலில் சென்றதும் கனிமொழியே ஏனெனில் அவரது வேகமான இயல்பு அது உடனே அவரின் இந்த அரசியல் செய்கை பொருத்துக்கொள்ள முடியாமல் இ-பாஸ் கூட எடுக்காமல் உதயநிதி சென்றது காமெடியின் உச்சம். அதாவது கனிமொழி எம்.பி ஆகையால் பதவியில் இருக்கும் அவருக்கு தேவையில்லை உதயநிதிக்கு என்ன பதவி இருக்கு? இவரும் நான் செல்கிறேன் பேர்வழி என்கிற பெயரில் அவசரமாக சென்று இன்றுவரை இ-பாஸ்'க்காக பதில் கூற முடியாமல் விழிக்கிறார்.
இந்த சம்பவங்களால் கனிமொழி அரசியல் பெயர் எடுப்பதை விரும்பாத உதயநிதி தி.மு.க இளம்பெண்கள் பாசறை என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார் அந்த பாசறை உதயநிதி'யின் கீழ் செயல்படும் எனவும் அறிவித்தார். உலகிலேயே கட்சியில் மகளிர் அணி இருக்கும் போது இளம்பெண்கள் அணியை ஒரு ஆண் தலைமை ஏற்க ஏற்பாடு செய்யும் ஒரே கட்சி தி.மு.க'தான் என்று உடன்பிறப்புகளே சிரிக்கிறார்கள். இத்தகைய காமெடி களேபரத்துக்கு காரணமே கனிமொழி மகளிர் அணி தலைவி என்கிற காரணம் தான்.
சில தரப்புகளில் இருந்து "அத்தை வேண்டாம்ப்பா நானே பார்த்துக்கொள்கிறேன்" என உதயநிதி ஸ்டாலினிடம் கூறியதாக தகவல் இதனால் கனிமொழி அப்செட் என்பதும் கூடுதல் தகவல்.