"காட்டுமிராண்டி" என யாரை குறிப்பிட்டார் உதயநிதி? #UdhayanithiStalin
"காட்டுமிராண்டி" என யாரை குறிப்பிட்டார் உதயநிதி? #UdhayanithiStalin

தி.மு.க'வின் பட்டத்து இளவரசர் கருத்து சொல்கிறேன் என்கிற பெயரில் அடிக்கடி உளறுவார் ஆனால் அவ்வபோது அழகான கருத்துக்களை கூறுவார். அந்த வகையில் இன்று "தெய்வீக செயலுக்கு எதிர்ப்பதமாக காட்டுமிராண்டி தனத்தை" மேற்கோள் காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவேற்றியுள்ளார்.
இன்று சமூக விரோதிகள் குமரி மாவட்டத்தில் அண்ணா சிலைக்கு காவி வண்ண துணியை போர்த்திவிட்டு சென்றனர் அதற்கு கருத்து சொல்கிறேன் பேர்வழி என்கிற பெயரில் தனது ட்விட்டர் பக்கத்தில் கீழ்கண்ட பதிவை வெளியிட்டார்
அதில்,
"குமரியில் பேரறிஞர் அண்ணா சிலையில் 'காவிக்கொடி கட்டி' அவமதிக்கப்பட்டதை கடுமையாக கண்டிக்கிறேன். 'காவி பூசுவது காட்டுமிராண்டித்தனமா?தெய்வீகச்செயலா?' என பட்டிமன்றம் நடத்தாமல், அண்ணா பெயரில் கட்சி நடத்தும் அடிமைகள் குற்றவாளியையும் தூண்டியவர்களையும் கைது செய்ய வேண்டும்" என குறிபிட்டு இருந்தது.
அதாவது தெய்வீகச்செயல் புரிபவர்களுக்கு எதிர்வினை காட்டுமிராண்டி செயல்புரிபவர்களை மேற்கோள் காட்டியது அடிக்கடி தி.மு.க, தி.க இயக்கங்கள் தெய்வீக செயலுக்கு எதிர்ப்பதமாக அதாவது காட்டுமிராண்டி தனமாக செயல்களை செய்வதாக தனக்கு தானே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துகொண்டார் இந்த முத்தமிழறிஞர் பேரன்.
அவரே தெய்வீக செயலுக்கு எதிர்ப்பதம் காட்டுமிராண்டி செயல் எனவும் குறிப்பிட்டது திராவிடர் கழகத்தையா அல்லது திராவிட முன்னேற்ற கழகத்தையா என்பதை அவரே விளக்கினால் நன்றாக இருக்கும்.
"பராசக்தி'யின் புகழ் வசனகர்த்தா கருணாநிதி'யின் பேரன் வாயாலேயே தங்கள் இயக்கங்களை காட்டுமிராண்டி செயல் இயக்கம் என கூறியதை கேட்க பாவம் கருணாநிதி உயிருடன் இல்லை" என மூத்த உடன்பிறப்பு ஒருவரின் புலம்பலை கேட்க முடிந்நது.