Kathir News
Begin typing your search above and press return to search.

மூன்றாம் கலைஞர் உதயநிதியின் பித்தலாட்டம்! அம்பலப்படுத்தினார், பா.ஜ.க செய்தி தொடர்பாளர் SG.சூர்யா

மூன்றாம் கலைஞர் உதயநிதியின் பித்தலாட்டம்! அம்பலப்படுத்தினார், பா.ஜ.க செய்தி தொடர்பாளர் SG.சூர்யா

மூன்றாம் கலைஞர் உதயநிதியின் பித்தலாட்டம்! அம்பலப்படுத்தினார், பா.ஜ.க  செய்தி தொடர்பாளர் SG.சூர்யா
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Nov 2019 3:22 PM IST


பொய் சொல்வதிலும், புரட்டிப் பேசுவதிலும், நடக்காத ஒன்றை நடந்ததாக கூறுவதிலும், தில்லுமுல்லு செய்வதிலும், பித்தலாட்டங்கள் செய்வதிலும், ரவுடித்தனம் செய்வதிலும், ஊழல் செய்வதிலும் கருணாநிதி குடும்பத்திற்கு ஈடு இணை இல்லை என்கிறது வரலாறு.


கருணாநிதியின் பெயரை காப்பாற்றும் வகையில், பட்டத்து இளவரசன் மூன்றாம் கலைஞர் உதயநிதி ஸ்டாலின், எல்லா வகையான பித்தலாட்டங்களிலும் சதம் அடித்து விளாசுகிறார்.


தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகி ஒருவரை, காதல் என்ற பெயரில் ஏமாற்றி கயமைத்தனம் செய்துவிட்டு பின்னர் கழற்றிவிட்ட செய்தி கொஞ்சம் பழசு. சமீபத்தில் ஒரு முன்னணி கதாநாயகி, அவரால் கர்ப்பமானார். அவரை மிரட்டி கர்ப்பத்தை கலைக்க வைத்து தனது குடும்ப பெயரை நிலைநாட்டினார் உதயநிதி. நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி, ஹைதராபாத் ஓட்டலில் ஓரிரவு லீலைகளை அரங்கேற்றியது பட்டிதொட்டியெல்லாம் இன்னமும் ரெக்கை கட்டி பறக்கிறது.


இப்படி பித்தலாட்டங்களுக்கு பெயர் போன மூன்றாம் கலைஞர் உதயநிதி ஸ்டாலினை நோக்கி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜக மாநில இளைஞரணி துணை தலைவரும், மாநில செய்தி தொடர்பாளருமான SG.சூரியா, டுவிட்டர் மூலம் கேள்விக்கணை ஒன்றை வீசினார்.


உதயநிதியிடம் கேள்வி கேட்ட SG.சூர்யாவுக்கு,” நான் முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலராக உள்ளேன் என்பதை நீ, நிரூபித்தால் நான் பாஜகவில் வந்து சேருகிறேன்” என்று ஆவேசமாக சவால் விட்டார்.


உதயநிதி ஸ்டாலின் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் என்பது இப்போது நிரூபணமாகி உள்ளது.


அதாவது முரசொலி அலுவலகம் உள்ள இடம் பஞ்சபி நிலம் என்ற புகார் தொடர்பாக வருகிற 19-ஆம் தேதி தேசிய பட்டியலின ஆணையம் விசாரணை நடத்துகிறது. இந்த விசாரணைக்கு ஆஜராகுமாறு முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் என்ற அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மன், முரசொலி அறக்கடையே, உதயநிதியிடம்தான் இருக்கிறது என்பதை பறை சாற்றுகிறது.


இது ஒருபுறம் இருக்க, முரசொலி அறக்கட்டளையில் நிர்வாக இயக்குனராக உதயநிதி ஸ்டாலின் உள்ளார் என்பதை ஆதாரபூர்வமாக SG.சூர்யா நிரூபித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். அவ்வளவுதான், மறு நிமிடமே SG.சூர்யாவின் டுவிட்டர் கணக்கை பிளாக் செய்துவிட்டு ஓடி விட்டார் பித்தலாட்ட உதயநிதி ஸ்டாலின்.


”முரசொலி அறக்கட்டளையில் நான் அறங்காவலர் என்று நிரூபி, நான் பா.ஜ.க-வில் சேர்கிறேன் என்றார் @udhaystalin அண்ணா. நிரூபித்தவுடன் என்னை ட்விட்டரில் Block செய்துவிட்டு பம்மி விட்டார். தற்போது நிர்வாக இயக்குனராக குற்றவாளியாக பதிலளிக்க போகிறார்?” என்று பதிவிட்டுள்ளார் SG.சூர்யா.




https://twitter.com/SuryahSG/status/1195686106223636480


மேலும், “அது சரி, The Indian Trusts Act, 1882 படி, அறக்கட்டளைகளுக்கு நிர்வாக இயக்குனர் என்ற பதவியே இருக்க கூடாதே? அறங்காவலர், நிர்வாக அறங்காவலர், தலைவர் வேணா இருக்கலாம். Companies Act படி பதிவு செய்தா தான் நிர்வாக இயக்குனர் பதவி இருக்க முடியும். அடுத்த பூதம் கிளம்பிடுச்சோ? என்னன்னு விரைவில் பார்க்கலாம். வர்ட்டா.:)” என்றும் SG.சூர்யா அடுத்த குண்டை தூக்கி போட்டுள்ளார்.


அதாவது முரசொலி அறக்கட்டளையில் உதயநிதி ஸ்டாலின் நிர்வாக இயக்குனர் என்பதை நிரூபித்தது மட்டுமல்லாமல், முரசொலி மு.க.ஸ்டாலினின் குடும்ப கம்பெனி என்பதையும் நிரூபித்துவிட்டார்.


இதனால் திமுகவையும், முக.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினையும் வெச்சி செய்து வருகின்றனர் சமூக வலைத்தள வாசிகள்.




https://twitter.com/SARAVAN62193898/status/1195725343811723265


மற்ற கட்சியினரிடம் சவால் விடுவதைப்போல பாஜகவினரிடம் வீராப்பாக சவால் விட்டு, வகையாக மாட்டிக்கொண்டுள்ளார் மூன்றாம் கலைஞர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News