Kathir News
Begin typing your search above and press return to search.

உஜ்வாலா திட்டம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு - கூடுதலாக 75 லட்சம் கியாஸ் இணைப்புகள் வழங்க மத்திய அரசு திட்டம்!

ஏழைப் பெண்களுக்கு இலவச சமையல் வியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது . இதனால் கூடுதலாக 75 லட்சம் கியாஸ் இணைப்புகள் அளிக்கப்படும்.

உஜ்வாலா திட்டம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு - கூடுதலாக 75 லட்சம் கியாஸ் இணைப்புகள் வழங்க மத்திய அரசு திட்டம்!
X

KarthigaBy : Karthiga

  |  14 Sep 2023 4:00 AM GMT

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைப் பெண்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் உஜ்வாலா திட்டம் கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது.இத்திட்டத்தில் இலவசமாக அளிக்கப்படும் கியாஸ் இணைப்புக்கான செலவை பொதுத்துறை எண்ணைய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு செலுத்தும் .இந்நிலையில் இத்திட்டத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய மந்திரி சபை முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று மதத்திய மந்திரி சபை கூட்டம் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி அனுராக் தாகூர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-


உஜ்வாலா திட்டம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுகிறது. இந்த மூன்று ஆண்டுகளில் கூடுதலாக 75 லட்சம் இலவச கியாஸ் இணைப்புகள் வழங்கப்படும். இதற்காக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூபாய் 1650 கோடியை விடுவிக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. இத்துடன் சேர்த்து உஜ்வாலா திட்டத்தின் மொத்த பயனாளிகள் எண்ணிக்கை 10 கோடியே 35 லட்சமாக உயரும் . ஜி 20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கும் தீர்மானம் மத்திய மந்திரி சபை கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இது தீர்மானத்தை ராணுவ மந்திரி ராஜநாத் சிங் கொண்டு வந்தார் .


ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமையானது. பிரதமர் மோடி மேற்கொண்ட பல்வேறு முன் முயற்சிகள் மீது கருத்தொற்றுமை ஏற்பட்டது. இது பிரதமர் மோடியின் திறமையான தலைமை பண்புக்கு ஒரு அடையாளம். இதை உலகமே பேசுகிறது . தலைவர்கள் பிரகடனம் ஒருமனதாக ஏற்கப்பட்டது. சர்வதேச நிகழ்வுகளில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதை நிரூபித்துள்ளது. பொருளாதார பெருவழி பாதை திட்டம் வரவேற்புக்குரியது. அனைவருக்கும் வளர்ச்சி என்ற பிரதமரின் கொள்கைப்படி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களுக்கு நீதி பெற்று தருவதற்காக ஈ கோர்ட்டு திட்டம் தொடங்கப்பட்டது.


அதன் இரண்டாவது கட்டம் முடிந்த நிலையில் மூன்றாவது கட்டத்தை தொடங்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. மூன்றாவது கட்டப்பணிகள் நான்காண்டுகள் அமலில் இருக்கும். இதற்கு ரூபாய் 7,210 கோடி ஒதுக்கப்படுகிறது .மூன்றாவது கட்டத்தில் கோர்ட்டு ஆவணங்கள் முழுமையாக டிஜிட்டல் மையமாக்கள் வழக்குகளை ஆன்லைனில் தாக்கல் செய்யும் . ஈ-பைலின் ஆன்லைனில் கட்டணம் செலுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News