இந்தியாவின் எச்சரிக்கைக்கு பணிந்து கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிக்கு இங்கிலாந்து அங்கீகாரம்!
இந்தியாவிலிருந்து இங்கிலாந்து செல்பவர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சை காரணமாக கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
By : Thangavelu
இந்தியாவிலிருந்து இங்கிலாந்து செல்பவர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சை காரணமாக கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை சமீபத்தில் அறிவித்தது. இதனால் இந்தியாவில் இருந்து வருபவர்கள் 2 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் அவர்கள் தடுப்பூசி போராதவர்களாகவே கருதப்படுவார்கள் எனவும் அவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் கூறியது.
மேலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டும் எவ்வித கட்டுப்பாடின்றி இங்கிலாந்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டது. ஆனால் இந்தியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால் இந்தியா கடும் அதிருப்தி அடைந்தது. இதற்கு கடும் கண்டனங்களையும் தெரிவித்தது.
இந்நிலையில், நியூயார்க்கில் நடந்த ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்ற வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், இங்கிலாந்து வெளியுறவு துறை அமைச்சர் எலிசபெத் டிரசை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியர்கள் மீதான பாரபட்சமான விதிமுறை குறித்து பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற விதமாக இந்தியாவின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கியது. கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இனிமேல் 10 நாட்கள் தனிமையில் இருக்கத் தேவையில்லை என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
Source: Dinakaran
Image Courtesy:NDTV