Kathir News
Begin typing your search above and press return to search.

செல்லப் பிராணிகளுக்கான தனியார் விமான சேவையை தொடங்கிய இங்கிலாந்து தம்பதியர்

இனி விமானத்தில் பயணம் செய்பவர்கள் தங்களது செல்ல பிராணிகளை மடியிலேயே வைத்து பயணம் செய்ய இங்கிலாந்து தம்பதியினர் தனியார் விமான சேவையை தொடங்கியுள்ளனர்.

செல்லப் பிராணிகளுக்கான தனியார் விமான சேவையை தொடங்கிய இங்கிலாந்து தம்பதியர்
X

KarthigaBy : Karthiga

  |  16 Sept 2023 12:15 PM IST

ஒரு காலத்தில் எட்டாக்கனியாக இருந்த விமான பயணம் இன்று சாமானியர்களும் பயன்படுத்தும் போக்குவரத்து சாதனமாக மாறிவிட்டது. இருந்தாலும் தனி நபர்கள் விமானத்தில் செல்வது சற்று சொகுசாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இதில் சற்று வித்தியாசமாக நாய்கள் போன்ற செல்ல பிராணிகளை அழைத்து செல்வதற்காகவே தனியார் விமான சேவையை துபாயில் வசித்து வரும் இங்கிலாந்து தம்பதியர் ஆடம் கோல்டர் மற்றும் கிறிஸ்டி ஆகியோர் செய்துள்ளனர்.


வர்த்தக நோக்கில் செய்திருந்தாலும் இந்த யோசனை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. மேற்கத்திய நாடுகளில் 90% வீடுகளில் செல்லப்பிராணிகளை காண முடியும். குறிப்பாக நாய் , பூனை, இகுவானா உட்பட பலவற்றையும் செல்லப்பிராணிகளாக வளர்ப்பது உண்டு. அப்படி மேற்கத்திய செல்ல பிராணி கலாச்சாரத்துடன் அமீரகத்தில் பலரும் குடியேறி இருக்கிறார்கள் . தங்கள் நாடுகளைப் போலவே அவர்கள் அமீரகத்திலும் நிறைய செல்லப்பிராணிகளை வளர்க்கிறார்கள்.


இருப்பினும் விடுமுறை நாட்களுக்கு சொந்த ஊர் செல்கையில் செல்ல பிராணிகளை அமீரக வீட்டிலேயே தவிக்கவிட்டு சென்று வந்த நிலையில் இனி அவற்றையும் தங்களுடன் அழைத்துச் செல்ல முடியும். ஆம் இத்தகைய பொது முயற்சியை தான் ஆடம் கோல்டர் மற்றும் கிறிஸ்டி தம்பதியினர் முன்னெடுத்துள்ளனர். துபாய் , லண்டன் நகரங்களுக்கு இடையே தனியார் ஜெட் விமானங்களை இந்த தம்பதியர் இயக்க உள்ளனர். நடப்பு மாதத்தில் தொடங்க உள்ள இந்த சேவையை பயன்படுத்தி தனிநபர்கள் தங்கள் செல்லப் பிராணிகளை மடியில் வைத்து பயணம் செய்ய முடியும் என்பது சிறப்பாகும் .


பயணிகள் விமானங்களில் செல்லப்பிராணிகளை கொண்டு செல்ல முடியும். ஆனால் அதற்கென பிரத்தியேக அறையில் வைத்து பல நடைமுறைகளுக்கு பிறகுதான் கொண்டு செல்ல முடியும் . ஆனால் நாங்கள் முன்னெடுத்து இருக்கும் முயற்சியினால் செல்லப்பிராணிகளை அவரவர் மடியிலேயே வைத்து பயணிக்க முடியும் என்கிறார்கள் புதுமை தம்பதியினர். இவர்களின் முயற்சி சூப்பர் தான் என்றாலும் கட்டணத்தை கேட்டால் சற்று மயக்கமாக தான் வரும். இந்திய மதிப்பில் 8.5 லட்சம் செலுத்த வேண்டும்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News