Kathir News
Begin typing your search above and press return to search.

இந்து வெறுப்புக்கு பிரிட்டனில் இடமில்லை - எதிர்க்கட்சித் தலைவர் கேர் ஸ்டார்மர் அதிரடி அறிவிப்பு!

இந்து வெறுப்புக்கு பிரிட்டனில் இடமில்லை - எதிர்க்கட்சித் தலைவர் கேர் ஸ்டார்மர் அதிரடி அறிவிப்பு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 Oct 2022 6:17 AM GMT

பிரிட்டனில் இந்து ஃபோபியாவுக்கு இடமில்லை என்று பிரிட்டன் எதிர்க்கட்சித் தலைவர் கேர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் நிறைய பேர் மத ரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். வெறுப்புக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. லீசெஸ்டர் மற்றும் பர்மிங்ஹாமில் நடந்த சம்பவங்கள் வருத்தமளித்தது.

வெறுப்பை பரப்பும் எல்லா முயற்சிகளுக்கும் எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும். மதம், வழிபாட்டுத் தலங்கள், மத அடையாளங்கள் என அனைத்தும் மதிக்கப்பட வேண்டும். அதற்கு பிரிட்டனில் லேபர் கட்சி ஆட்சி அமைய வேண்டும். அது மக்களை இணைக்கும். பிரிவினை அரசியலை முடிவுக்குக் கொண்டு வரும் எனக் கூறினார்.

நிகழ்ச்சியில் பேச்சை முடிக்கும்போது, உலகம் முழுவதும் ராவணனை எரிக்கும் நெருப்பு பிரிட்டன் சமூகம் எதிர்கொண்டுள்ள தீமையை அழிக்க வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

நம் சமூகத்தில் நிலவும் வறுமை, அநீதி, வெறுப்பு, தீய பழக்கங்கள் அனைத்தையும் ஒழிக்க வேண்டிய நேரம் இது என்று கேர் ஸ்டார்மர் கூறினார்.

Input From: NDTV

Next Story
கதிர் தொகுப்பு
Trending News