தீவிரமாக அதிகரிக்கும் உக்ரைன்- ரஷ்யா போர்: ஒரே நாளில் 500 வீரர்கள் உயிரிழப்பு!
தீவிரமடையும் உக்ரைன் ரஷ்ய போர் காரணமாக ஒரே நாளில் சுமார் 500 வீரர்கள் உயிரிழந்தனர்.
By : Bharathi Latha
உக்ரைன்- ரஷ்ய போர் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நீடித்து வருகிறது. இருநாடுகளுக்கு இடையிலான போர் நேற்று தீவிரமடைந்து இருக்கிறது. உக்ரேனில் இருக்கும் பக்மத் நகரில் உக்ரைன்- ரஷ்ய வீரர்கள் இடையிலான கடுமையான சண்டை நேற்று நடந்திருக்கிறது. இந்த சண்டையில் 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அமெரிக்க தலைமையிலான நோடா ராணுவ கூட்டமைப்பில் இணைந்து பாதுகாப்புகளை தேடும் என்று உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ரஷ்யா போர் தொடுத்தது. ஓர் ஆண்டுகளை கடந்தும் இந்த போர் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கி இன்றும் நீடித்து வருகிறது.
தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான மக்களை அண்டை நாடுகளில் பகுதிகளாக தஞ்சம் புகுத்த செய்திருக்கிறது குறிப்பிடத்தக்கது. இருதரப்பும் தங்களுடைய போரை முடித்துக் கொள்ள எந்த ஒரு சமாதானமும் முயற்சியையும் தற்போது வரை முன்னெடுக்காமல் தொடர்ந்து போரில் தீவிரத்தை அதிகரித்து வர செய்கிறது. இந்த போரில் உக்ரைனில் பல முக்கிய நகரங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள ரஷ்ய தற்போது கிழக்கில் உள்ள பக்மத் நகரை கைப்பற்றி இருக்கிறது. இது சாதகமாக கொண்டு ரஷ்யா உக்ரைனை முழுமையாக கைப்பற்றி விடலாம் என்ற ஒரு நோக்கில் தீவிரமாக போரில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
அதே சமயம் உடன் தரப்பில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து எந்த ஒரு தகவல்களும் தற்போது வரை தெரியப் படுத்தப்படவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் 16 முறை தாக்குதல்கள் நடத்தி இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. உக்ரைன் வீரர்கள் சரியான பதிலடி கொடுத்தனர்.nஇந்த சண்டையின் போது எதிராளிகளின் படையில் இருந்தும் ரஷ்ய படையில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து 250 க்கு மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News