ஐ.நா. சபையில் பேச மு.க ஸ்டாலினுக்கு அழைப்பு வந்ததாக பொய் கூறி திமுகவினர் தம்பட்டம்!! உண்மையை தோலுரித்த நெட்டிசன்கள்!!
ஐ.நா. சபையில் பேச மு.க ஸ்டாலினுக்கு அழைப்பு வந்ததாக பொய் கூறி திமுகவினர் தம்பட்டம்!! உண்மையை தோலுரித்த நெட்டிசன்கள்!!
By : Kathir Webdesk
ஐ.நா.சபையின் மனித உரிமை கமிஷன் வரும் செப்டம்பர் மாதம் 9 ந்தேதியில் இருந்து 27 ந்தேதி செப்டம்பர் வரை பொருளாதார சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் 42 வது அமர்வுக் கூட்டம் ஒன்றை நடத்துகிறது.
இந்த அமர்வுக் கூட்டத்தில் பங்கேற்று போரினால் பாதிக்கப்பட்ட இனங்கள் குறித்த மற்றும் அவர்களின் பொருளாதார சீர்திருத்த, புனர்வாழ்வுக்கான கோரிக்கைகள் குறித்து விவாதம் செய்யவும், அறிக்கை அளிக்கவும் தொடர்புடையோர் யாராக இருந்தாலும் அவர்கள் மேற்கண்ட அமர்வில் தங்கள் சொந்த போக்குவரத்து மற்றும் அனைத்து பயணசெலவுகளையும் தாங்களே ஏற்றுக் கொண்டு வரவேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
இதில் கலந்து கொள்ள இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பலர் செல்லும் நிலையில் இதில் எவ்வித தொடர்பும் இல்லாத மு.க.ஸ்டாலின் பெயரிலும் அந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் பங்கேற்க வருபவர்களுக்கான நிபந்தனைகள் குறித்து ஐநா மனித உரிமை ஆணைய அலுவலகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில் இது அழைப்புக் கடிதம் அல்ல என்று தெளிவாகக் குறிப்பிட்டு எழுதப்பட்ட நிலையிலும், திமுகவினர் இலங்கை தமிழர்கள் உரிமை குறித்துப் பேச தங்கள் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு ஐநா. சபையிலிருந்து அழைப்பு வந்துள்ளதாகவும், தங்கள் தலைவர் அங்கு சென்று பேசவுள்ளதாகவும் பொது வெளிகளில் தம்பட்டம் அடித்து வருகின்றனர்.
இதை அடுத்து ஸ்டாலின் மற்றும் திமுகவினரின் பொய்யான, போலியான தம்பட்டங்களை சமூக ஊடகங்களில் பலர் நையாண்டி செய்து உண்மையை தோலுரித்து வெளிக் காட்டி வருகின்றனர்.
ஐநா சபை மனித உரிமைகள் கமிஷன்ல, தமிழ்நாட்டுக்காரன் எவனோ இருக்கான் போல.... சாதாரணமா லெட்டர் அனுப்புனா, உபிங்க அதை வெச்சு பாலிடிக்ஸ் பண்ணுவாங்கன்னு நல்லாத் தெரிஞ்சுதான், அந்த லெட்டர்ல இது இன்விடேஷன் இல்ல, உங்க ரெஜிஸ்ட்ரேஷனுக்கான கன்பர்மேஷன்கிற வரியைச் சேர்த்து சாணியடிச்சிருக்கான்...என்று சிலர் விமர்சித்துள்ளனர்.