Kathir News
Begin typing your search above and press return to search.

வாழ்க்கை ஒரு வட்டங்க..இந்தியாவின் தயவை நாடும் ஆப்கானிஸ்தான்! தேடி வரும் ஐ.நா சபை..!

UN In Talks With India For Wheat Donations To Taliban-Controlled Afghanistan Facing Acute Food Crisis

வாழ்க்கை ஒரு வட்டங்க..இந்தியாவின் தயவை நாடும் ஆப்கானிஸ்தான்! தேடி வரும் ஐ.நா சபை..!
X

MuruganandhamBy : Muruganandham

  |  8 Oct 2021 3:01 AM GMT

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் கீழ், தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானுக்கு உணவு நெருக்கடியை எதிர்கொள்ள கோதுமையை நன்கொடையாக வழங்க வேண்டி இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்ட இயக்குனர் மேரி-எலன் மெக்ரோடி, இந்தியாவில் இருந்து நன்கொடைகள் மீண்டும் தொடங்கும் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்

கடந்த ஆண்டு 75,000 டன் கோதுமையை அந்த நாட்டிற்கு நன்கொடையாக வழங்கியது இந்தியா. தற்போது ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டு 2.5 மில்லியன் டன் பற்றாக்குறை உள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உணவு உதவி அனுப்புவதற்கு பாகிஸ்தான் தரை வழித்தடங்கள் பெரும் தடையாக உள்ளது. வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தானுக்கான அவசர உதவி குறித்து, ஐநா பொதுச்செயலாளரிடம் கடந்த மாதம் கூட்டிய உயர்மட்ட கூட்டத்தில்சுட்டிக்காட்டினார்.

மனிதாபிமான உதவி வழங்குவதற்கு ஆப்கானிஸ்தானுக்கு தடையின்றி நேரடி அணுகல் வழங்கப்படுவது அவசியம் என்று அவர் கூறினார். அமெரிக்கா போன்ற பெரும்பாலான நாடுகள், தாலிபான்களிடம் உதவிகளை ஒப்படைக்காமல் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானால் நேரடியாக தரை மூலம் உணவு உதவிகளை அனுப்புவது தடுக்கப்பட்டது. 75,000 டன் கோதுமை கடந்த ஆண்டு கடல் வழியாக ஈரானில் உள்ள சபாஹாரில் உள்ள இந்தியாவால் கட்டப்பட்ட துறைமுகத்திற்கும், அங்கிருந்து இந்தியாவால் அமைக்கப்பட்ட சாலை வழியாக ஆப்கானிஸ்தானுக்கும் சென்றது.

ஆப்கானிஸ்தான் நெருக்கடியை தவிர்க்க கோதுமை விரைவான விநியோகத்திற்காக இந்தியாவை நம்பியிருக்க வேண்டியிருக்கும். ஆப்கானிஸ்தானில் சுமார் 3.2 மில்லியன் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் இந்த வருட இறுதிக்குள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படலாம் மற்றும் உடனடி சிகிச்சை இல்லாமல், குறைந்தது ஒரு மில்லியன் பேர் இறக்கும் அபாயம் உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News