அமீரகம் மும்பை இடையே கடலில் சுரங்க பாதை திட்டம்!
ஐக்கிய அமீரகம் மற்றும் மும்பை இடையே கடலில் சுரங்கபாதை அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
By : Karthiga
மராட்டிய மாநில தலைநகர் மும்பைக்கும் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கும் இடையே புல்லட் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜப்பான் நிதியுதவியுடன் ரூபாய் ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி செலவில் நிறைவேற்றப்பட இருக்கும் இந்த திட்டத்துக்கான கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக தனி ரயில் பாதை அமைக்கப்படுகிறது இந்த பாதையில் மணிக்கு அதிகபட்சமாக 350 km வேகத்தில் புல்லட் ரயில் செல்லும். இடையேயான 58 கிலோ மீட்டர் தூரத்தை 3 மணி நேரத்தில் கடந்து விடும். இந்த திட்டத்தில் மும்பைக்கும் அருகே உள்ள தானேவுக்கும் இடையே 21 கிலோமீட்டர் நீளத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் 7 km நீள பாதை கழிமுக கடல் பகுதியின் அடியில் அமைகிறது.
இது இந்தியாவில் கடலுக்கு அடியில் அமைய இருக்கும் முதல் சுரங்க ரயில் பாதை ஆகும்.இதே போல மற்றொரு பெரிய திட்டமும் ஆய்வில் உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏராளமான இந்தியர்கள் வசிக்கிறார்கள். இதனால் நம் நாட்டில் இருந்து அங்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் அங்கிருந்தும் ஏராளமான விமானங்கள் இந்திய நகரங்களுக்கு வந்து செல்கின்றன. அமீரகத்தில் உள்ள புஜரா துறைமுகத்தில் இருந்து மும்பைக்கு கடலுக்கு அடியில் மிதவை சுரங்கபாதை அமைத்து அதன் மூலம் ரயில் போக்குவரத்தை நடத்துவதற்கான சாத்திய கூறுகள் பற்றி ஆராயப்பட்டு வருகிறது. பஸ்தாரில் உள்ள தேசிய ஆலோசனை குழுமம் என்ற நிறுவனம் இந்த திட்டத்துக்கான யோசனை தெரிவித்து இருக்கிறது. இந்த இரு நகரங்களுக்கும் இடையே ஆன தூரம் 2000 கிலோமீட்டர் ஆகும் .
கடலுக்குள் இவ்வளவு தூரம் மிதவை சுரங்கப்பாதை அமைக்கப்படும் பட்சத்தில் மும்பையில் இருந்து ரயிலில் ஏழு முதல் எட்டு மணி நேரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்று விட முடியும். இந்த சுரங்க பாதையில் பயணிகள் ரயில் மட்டும் இன்றி சரக்கு ரயில்களை இயக்குவது பற்றியும் அத்துடன் சுரங்கப் பாதையில் குழாய்கள் அமைத்து வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் மும்பைக்கும் இங்கிருந்து குடிநீர் அங்கு கொண்டு செல்வது பற்றியும் ஆராயப்பட்டு வருகிறது .இந்த திட்டம் நனவாகும் பட்சத்தில் அது மிகப்பெரிய சாதனையாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
SOURCE : DAILY THANTHI