Kathir News
Begin typing your search above and press return to search.

நீருக்கடியில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்-ஸ்கூபா டைவர்ஸ் அசத்தல்!

ஸ்கூபா டைவர்ஸ் சென்னை நீலாங்கரையில் நீருக்கடியில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

நீருக்கடியில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்-ஸ்கூபா டைவர்ஸ் அசத்தல்!
X

KarthigaBy : Karthiga

  |  12 April 2024 4:48 PM GMT

நாட்டில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. பொது தேர்தலில் வாக்களிக்க கிட்டத்தட்ட 97 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ள நிலையில் சென்னை ஸ்கூபா டைவர்ஸ் நீருக்கடியில் தனித்துவமான முறையில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர் .

வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சென்னை நீலாங்கரையில் ஆறு டைவர்ஸ் ஆழ்கடலில் இறங்கி வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை தெரிவிக்கும் வகையில் 60 அடி ஆழ நீருக்கு அடியில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை செயல்படுத்தினர். இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்குப்பதிவு விழிப்புணர்வு பதாகைகளுடன் போலி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஏந்தி கடலில் மூழ்கினர் .எனது வாக்கின் வலிமை எனக்கு தெரியும் மற்றும் எனது நாடு என் வாக்கு என்று பலகையில் எழுதப்பட்டிருந்தது .

ஓட்டு போடுவது நமது கடமையும் உரிமையும் என்பதை உணர்த்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததாக டைவர்ஸ் ஒருவர் தெரிவித்தார். ஆழமான டைவிங் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஸ்கூபா டைம் பயிற்றுவிப்பாளரும் டெம்பில் அட்வென்சர் இயக்குனருமான எஸ்பி அரவிந்த் தருண் ஸ்ரீ ஏற்பாடு செய்தார்.


SOURCE :Dinaseithi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News