பாகிஸ்தானில் வேலையில்லாத கொடுமை! ஒரே ஒரு வேலைக்கு 15 லட்சம் பேர் விண்ணப்பம்!
பாகிஸ்தானில் வரலாறு இல்லாத வகையில் வேலையின்மை ஏற்பட்டுள்ளதால், ஒரே ஒரு நீதிமன்ற அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு 15 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
By : Thangavelu
பாகிஸ்தானில் வரலாறு இல்லாத வகையில் வேலையின்மை ஏற்பட்டுள்ளதால், ஒரே ஒரு நீதிமன்ற அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு 15 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
பாகிஸ்தான் திட்டம் மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் நிலைக்குழுவில், பொருளாதார மேம்பாட்டு நிறுவனம் சமர்பித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் தரவு விவரங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் தரவுகளின்படி கல்வியறிவு பெற்றவர்களில் 24 சதவீதம் பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் தவிர்த்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்ற பெண்களில் 40 சதவீதத்தினர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர். தற்போது வேலையின்மை அதிகரித்திருப்பதால் ஒரே ஒரு நீதிமன்ற அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு 15 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். பாகிஸ்தானில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 16 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Dinamalar