டவ் ஷாம்பூ வேதிப்பொருள் புற்றுநோய் ஏற்படுத்துமாம் - யுனிலீவர் திரும்பப்பெற முடிவு!
அமெரிக்காவில் டவ் ஷாம்புவை திரும்ப பெற யுனிலீவர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
By : Bharathi Latha
டவ் ஷாம்புவில் கலந்திருப்பது என்ன?
அமெரிக்காவில் டவ் ஷாம்புவை திரும்ப பெற முடிவு செய்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. பென்சீன் என்ற வேதிப்பொருள் அதிகமாக கலந்திருப்பதன் காரணமாக தனது தயாரிப்பாளர் ஷாம்பு உள்ளிட்ட பல்வேறு டவ் ஷாம்புகளை திரும்ப பெறுவதாக யுனிலீவர் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஒரு அறிவிப்பு காரணமாக அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
புற்றுநோய் விளைவிக்கும்!
2021 அக்டோபர் மாதத்திற்கு முந்தைய தனது தயாரிப்புகள் புற்றுநோயை விளைவிக்கும் பென்சீன் என்ற வேதிப் பொருள் அதிகமாக கலந்து இருப்பதாக கூறி அவற்றை திரும்ப பெறுவதாக அந்த ஒரு நிறுவனம் தற்போது அறிவித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பாக இருக்கும் நெக்சஸ், சாவே, ட்ரெஸ்ஸமே, டிகி மற்றும் ஏரோஸார் ட்ரை ஷாம்பூ ஆகியனவற்றை அமெரிக்க சந்தைகளில் இருந்து திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது.
டவ் ஷாம்பூ பயன்படுத்தியவர்கள் அச்சம்: இந்த ஒரு தகவல் காரணமாக சமூக வலைத்தளத்தில் பல்வேறு பெண்கள் அதிகமாக பகிர்ந்த ஒரு செய்தியாகவும் இது பார்க்கப்படுகிறது. திடீரென்று அந்தப் பிரபலமான நிறுவனம் இப்படி அறிவித்தது பெண்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. புற்றுநோயை விளைவிக்கும் பென்சீன் கலந்துள்ளதாக வெளியான தகவலால் டவ் ஷாம்பூ பயன்படுத்தியவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
Input & Image courtesy: Kumudam