தமிழ்நாட்டுக்கு 11 நர்சிங் கல்லூரிகள் - மாணவர்களுக்கு மோடி தரும் சூப்பர் கிப்ட்!
ரூபாய் 1,570 கோடி செலவில் புதிதாக 157 அரசு நர்சிங் கல்லூரிகள் அமைக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.
By : Karthiga
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நடந்தது. அதில் சதீஷ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் குண்டுவெடிப்பில் பலியான போலீசாருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது .மேலும் பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி பிரகாஷ் சிங் பாதல் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .அதை தொடர்ந்து நாட்டின் 157 அரசின் நர்சிங் பயிற்சி கல்லூரிகள் அமைக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது .1,570 கோடி செலவில் இவை நிறுவப்படும்.
தற்போதைய மருத்துவ கல்லூரிகள் அமைந்துள்ள இடத்துக்கு அருகிலேயே அவை அமைக்கப்படும். அப்போதுதான் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக்கூட வசதிகள் கிடைக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நிருபர்களிடம் தெரிவித்தார். இந்த கல்லூரிகள் இரண்டு ஆண்டுகளில் நிறுவப்படும் என்றும் மலிவான, தரமான நர்சிங் கல்வி கிடைக்கச் செய்வதும் நர்சுகள் எண்ணிக்கையை அதிகரிப்பதும் இதன் நோக்கங்கள் என்றும் அவர் கூறினார். தேசிய மருத்துவ சாதனங்கள் கொள்கைக்கு மதிய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது . இதுகுறித்து மன்சுக் மாண்டவியா நிருபர்களிடம் கூறியதாவது:-
மருத்துவ சாதனங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதை அதிகரிக்கவும் அவற்றை இறக்குமதி செய்வததை குறைக்கவும் இக்கொள்கை கொண்டுவரப்படுகிறது .இதன் மூலம் மருத்துவ சாதனங்கள் துறையின் வளர்ச்சி ஐந்து ஆண்டுகளில் 1,100 கோடி டாலரில் இருந்து 5 ஆயிரம் கோடி டாலராக உயரும் என்று எதிர்பார்க்கிறோம் .இவ்வாறு அவர் கூறினார்.