2024-25 பருவத்தில் கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
By : Karthiga
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் 2024-25 பருவத்தில் கச்சா சணலுக்காண குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 2024-25 பருவத்திற்கு குவிண்டாலுக்கு ரூபாய் 5335 ஆக ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு குவிண்டாலுக்கு ₹285 அதிகமாகும். இது அகில இந்திய சராசரி உற்பத்தி செலவில் 64.8 சதவீத வருவாயை உறுதி செய்யும். கடந்து பத்து ஆண்டுகளில் கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 2014 -15 ஆம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 2400 இல் இருந்து 2024 - 25 ஆம் ஆண்டில் ரூபாய் 5335 ஆக உயர்த்தி, 122% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நடப்பு 2023-24 பருவத்தில் சுமார் 1.65 லட்சம் விவசாயிகள் பயனடையும் வகையில் 524.32 கோடி மதிப்பிலான 6.24 லட்சம் பேல் கச்சா சணல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
SOURCE :Kaalaimani.com