Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய விமான படைக்கு ரூபாய் 6828 கோடிக்கு 70 பயிற்சி விமானங்கள் கொள்முதல்- மத்திய மந்திரி சபை ஒப்புதல்

இந்திய விமானப்படைக்கு 6828 கோடிக்கு 70 பயிற்சி விமானங்கள் கொள்முதல் செய்ய மதிய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

இந்திய விமான படைக்கு ரூபாய் 6828 கோடிக்கு 70 பயிற்சி விமானங்கள் கொள்முதல்- மத்திய மந்திரி சபை ஒப்புதல்

KarthigaBy : Karthiga

  |  2 March 2023 7:00 AM GMT

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. அதில் இந்திய விமான படைக்கு ஹெச்.டி.டி -40 ரகத்தைச் சேர்ந்த 70 அடிப்படை பயிற்சி விமானங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு விவகாரங்களுக்கான மந்திரி சபை குழு ஒப்புதல் அளித்தது . 6828 கோடி செலவில் இந்திய விமானங்கள் வாங்கப்படும். பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் இந்த விமானங்களை உற்பத்தி செய்து அளிக்கும் படிப்படியாக ஆறு ஆண்டுகளில் இந்த விமானங்கள் விநியோகிக்கப்படும் . இந்த விமானங்கள் குறைந்த வேகத்திலும் பயிற்சிக்கு ஏற்ற வகையிலும் செயல்பட கூடியவை . 56 சதவீத உதிரி பாகங்கள் முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும். விமானங்கள் உற்பத்திக்காக சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் பயன்படுத்தும்.


எனவே இந்த உற்பத்தியில் சராசரியாக 1500 ஊழியர்களுக்கு நேரடியாகவும் சிறு, குறு நடுத்தர நிறுவனங்களை சேர்ந்த 3000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் . பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா தற்சார்பு நிலையியை அடைவதை வலுப்படுத்துவதில் இம்முடிவு முக்கியமானது என்று ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் சிங் கூறினார் .3108 கோடி செலவில் மூன்று பயிற்சி கப்பல்கள் கொள்முதலுக்கு எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. சென்னையை அடுத்த காட்டுப் பள்ளியில் உள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்தில் இந்த கப்பல்கள் வடிவமைத்து கட்டப்படும் .


கப்பல்களை ஒப்படைக்கும் பணி 2026 ஆம் ஆண்டு தொடங்கும் . கடற்படைக்கு தேர்ந்தெடுக்கப்படும் ஆண் பெண்களுக்கு அடிப்படை பயிற்சிக்கு பிறகு பயிற்சி அளிக்க இக்கப்பல்கள் பயன்படுத்தப்படும் .அண்டை நாடுகளைச் சேர்ந்த கடற்படையினருக்கும் பயிற்சி அளிக்க பயன்படுத்தப்படும் பேரிடர் காலத்தில் மீட்பு மற்றும் மனிதாபிமான உதவி அளிக்க உதவும். கப்பல் கட்டும் பணியில் சிறு , குறு நடுத்தர நிறுவனங்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் உதவும் என்று ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News