Kathir News
Begin typing your search above and press return to search.

செய்ய வேண்டியதை செய்து சாதித்த அண்ணாமலை - காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசு!

தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

செய்ய வேண்டியதை செய்து சாதித்த அண்ணாமலை - காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசு!

KarthigaBy : Karthiga

  |  9 April 2023 6:57 AM GMT

நாடு முழுவதும் 101 வட்டாரங்களில் நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பை கடந்த மாதம் 29ஆம் தேதி நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டது. இதில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் மைக்கேல் பட்டி கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டத்தில் சேத்தியாதோப்பு கிழக்கு பகுதி தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் வடசேரி ஆகிய மூன்று பகுதிகள் இடம் பெற்றுள்ளன.


இந்த மூன்று பகுதிகளும் காவிரி டெல்டா பகுதிகள் ஆகும். காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு எப்படி நிலக்கரி எடுக்கும் பணிகளை மேற்கொள்ள முடியும் எனக்கூறி மத்திய அரசு நடவடிக்கைக்கு டெல்டா மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் . பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேபோன்று தமிழக அரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது .

அதில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க அனுமதிக்கும் டெண்டர் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மத்திய மந்திரி பிரகலாத் ஜோசியை நேரில் சந்தித்து காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க அனுமதிக்கும் டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார் . மத்திய மந்திரியும் அது குறித்து பரிசேரிப்பதாக உறுதி அளித்தார் .


இந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க அனுமதிக்கும் டெண்டர் அறிவிப்பை ரத்து செய்வதாக பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். நேற்று முன்தினம் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரகலாத் ஜோஷி இதனை தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் பதிவில் காவிரி டெல்டா பகுதியில் 3 இடங்களில் நிலக்கரி எடுக்கும் டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என பெங்களூருவில் என்னை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து கேட்டுக் கொண்டார்.


கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையிலும் தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டும் காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க அனுமதிக்கும் டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார் .மத்திய மந்திரியின் இந்த அறிவிப்புக்கு அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News