வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் நிச்சயம் தேர்ந்தெடுப்பார்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் நிச்சயம் தேர்ந்தெடுப்பார்கள் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
By : Karthiga
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்ற மக்களவை மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவு நேற்று காலை 7:00 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் அமித்ஷா குஜராத் மாநிலம் காந்தி நகரில் இரண்டாவது முறையாக களம் காண்கிறார் .பாராளுமன்ற மக்களவையில் மூன்றாம் கட்ட தேர்தலை ஒட்டி குஜராத் ,கர்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்றது.
இதில் மதிய உள்துறை மந்திரி அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி, ஆகியோர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வாக்களித்தனர். அகமதாபாத்தில் வாக்களித்த பின் அமித்ஷா செய்தியாளர்களுடன் பேசுகையில் ,கொளுத்தும் வெயிலையும் பொருள்படுத்தாமல் வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குஜராத்தில் 2.5 மணி நேரத்தில் 20% வாக்குகள் பதிவாகியுள்ளன. நிலைத்தன்மை, பாதுகாப்பு ,நாட்டின் வளம் மற்றும் இந்தியாவை வறுமையில் இருந்து விடுவிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.
இந்த ஜனநாயக திருவிழாவில் மக்கள் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "மக்களவைத் தேர்தல் மூன்றாவது கட்ட வாக்குப்பதிவில் மக்கள் தங்கள் கடமையை ஆற்றும் படி கேட்டுக்கொள்கிறேன். இது நீங்கள் தேசத்தை கட்டமைக்க செய்யும் கடமையாகும் .மீண்டும் ஊழல் அற்ற, சாதி பேதுமற்ற, வாரிசு அரசியல் இல்லாத ஆட்சி அமைய வாக்களியுங்கள். மக்கள் நலனில் அக்கறை கொண்ட இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டங்கள் கொண்ட ஆட்சியை தேர்ந்தெடுங்கள். நீங்கள் செலுத்தும் வாக்கு உங்களுக்கான வளத்தை கொண்டு வருவதோடு தேசத்துக்கும் இனி வருங்காலங்களில் நன்மை சேர்க்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
SOURCE :Dinamani