கொரோனா சோம்னியா நோய் பற்றி தெரியாத பல விஷயங்கள் !
Unknown fact about Coronasomnia disease.
By : Bharathi Latha
கொரோனா தொற்றின் காரணமாக உலக மக்களின் வாழ்க்கைமுறைகள் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. உலகின் பெரும்பாலான மக்களுக்கு மன அழுத்தம் அதிகரித்து தூக்கமின்மை பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், அவர்களின் உறவினர்கள், மருத்துவர்கள், துணை மருத்துவர்கள் மற்றும் ஆன்லைன் கல்வி பயிலும் மாணவர்கள் என பலரும் கொரோனா சோம்னியா பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனாசோம்னியா பிரச்சினை என்பது என்ன? யார்? யாருக்கு இது ஏற்படும்? என்பது பற்றி பார்ப்போம்.
கொரோனாசோம்னியா பிரச்சினையின் அறிகுறிகளைப் பொறுத்தவரை, தூங்குவதில் சிரமம், தூக்கமே வராமல் இருத்தல், தலைவலி, கவலை போன்ற சிக்கல்கள் இருக்கலாம். பொதுவாக இந்த பிரச்சினைகளுக்கான முக்கிய காரணம் தூக்கமின்மை தான். இந்த தூக்கமின்மைக்கான காரணங்கள் நிறைய உள்ளன. கொரோனா பரவாமல் தடுக்க பல இடங்களிலும் விதிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக ஒரு மாதிரியான மன இறுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவில் தூங்க முடியாமல் தூக்கமின்மை ஏற்படுகிறது.
கொரோனாசோம்னியா பிரச்சினைக்கு எதிராக போராட உதவும் சில விஷயங்கள், இளநீர், பழச்சாறுகள், செம்பருத்தி தேநீர், கொத்தமல்லி, சுக்கு, இஞ்சி தேநீர் போன்ற இயற்கை பானங்களைக் குடிப்பதால் நல்ல தூக்கம் கிடைக்கும். செயற்கை பானங்களைத் தவிர்ப்பது நல்லது. பழங்கள், காய்கறிகள், கீரைகள் எல்லாமே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். துரித உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. தற்போது பெரும்பாலான பணிகள் ஆன்லைல் மூலமே செய்யப்படுவதால், கணினிகள் மற்றும் ஸ்மார்ட் போன்களின் திரையைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது. எனவே, கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களின் திரைகளை பணி நேரம் தவிர மற்ற நேரங்களில் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
Input:https://m.timesofindia.com/life-style/health-fitness/health-news/coronasomnia
Image courtesy:Times of India