Kathir News
Begin typing your search above and press return to search.

உலகத்திற்கே முன் மாதிரியாக உத்தரப் பிரதேசம் திகழ்கிறது - பில் கேட்ஸ் மனைவி புகழாரம்!

உலகத்திற்கே முன் மாதிரியாக உத்தரபிரதேசம் திகழ்வதாக பில் கேட்ஸ் முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ் கூறுகிறார்.

உலகத்திற்கே முன் மாதிரியாக உத்தரப் பிரதேசம் திகழ்கிறது - பில் கேட்ஸ் மனைவி புகழாரம்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  9 Dec 2022 5:12 AM GMT

மைக்ரோசாப்ட் நிறுவன இணை நிருபர் நிறுவனர் பில் கேட்ஸ் முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ். இவர் பில் கேட்ஸ் உடன் இணைந்து பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை என்று சமூக சேவை நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் இந்த சமூக சேவை அறக்கட்டளை மூலமாக சமுதாயத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து இருக்கிறார்.


இந்த நிறுவனம் சார்பில் உத்தரபிரதேச மாநிலத்தில் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் உள்ள அவரது அரசு இல்லத்தில் மெலிண்டா கேட்ஸ் நேற்று சந்தித்தார். அவரை யோகி ஆதித்யநாத் நாட்டு வரவேற்றார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியின் போது அவர் கூறுகையில், அடர்த்தியான மக்கள் தொகை அதாவது அதிக மக்கள் தொகை கொண்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கொரோனாவை உத்தரபிரதேச அரசு கையாண்ட விதம் மிகவும் பாராட்டு தக்கது.


இங்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட விதத்தை உலகம் கற்றுக் கொள்ள வேண்டும். சுகாதார பாதுகாப்பு, ஊட்டச்சத்து, கல்வி பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் போன்ற விஷயங்களில் இந்தியாவிற்கு மட்டுமின்றி உலகத்திற்கு முன்மாதிரியாக உத்தர பிரதேசம் திகழ்வதாகவும் அவர் கூறியிருக்கிறார். கொரோனா களத்தில் உத்தரபிரதேச அரசுக்கு அளித்த ஆதரவுக்காக பில்கேட் மற்றும் அவருடைய முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தனார் தனது நன்றியை தெரிவித்து இருக்கிறார்.

Input & Image courtesy: Thanthi News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News