293 கோடியில் மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டல்: 40 வருடகால காத்திருப்புக்கு கிடைத்த தீர்வு!
40 வருட கால காத்திருப்புக்கு தீர்வாக 293 கோடியில் மருத்துவக் கல்லூரி உத்தரப்பிரதேச அமேதியில் அமைய உள்ளது.
By : Bharathi Latha
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்தில் உள்ள அமேதியில் 293 கோடி மதிப்பிலான அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி, 500 படுக்கைகள் கொண்ட மாவட்ட அளவிலான பரிந்துரை மருத்துவமனையை திறந்து வைத்த பின்னர் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய யோகி ஆதித்யநாத் அவர்கள் கீழ்க்கண்டவாறு தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சரும், அமேதி எம்பியுமான ஸ்மிருதி இரானியும் கலந்து கொண்டார். முந்தைய அரசாங்கம் வெறும் வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்துக் கொண்டு வந்ததாகவும் அவர் கூறினார்.
1982 -அமேதிக்கு மருத்துவக் கல்லூரி வழங்கப்படும் என்று பிரதமர் இந்திரா காந்தி வாக்குறுதி அளித்தார். கல்லூரி கட்டுவதற்கு சஞ்சய் காந்தி அறக்கட்டளைக்கு நிலம் ஒதுக்கப்பட்டது ஆனால் அது நடக்கவில்லை. 2022 முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல்வராக இருந்து தற்போது இன்று அமேதியில் ₹292 கோடியில் 100 ஏக்கர் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார். அமேதியின் 40 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்தது.
பொதுக்கூட்டத்தின் போது, அங்கீகரிக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிக்கு 292 கோடி பட்ஜெட் ஒப்புதல், முதல் தவணை ரூ. 22 கோடி விடுவிக்கப்பட்டது பின்னர் முதல்வர் அடிக்கல் நாட்டினார். இதனுடன், முதலமைச்சரின் திட்டத்திற்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில், போர்க்கால அடிப்படையில் முன்னேற்பாடுகளை இறுதி செய்யும் பணியில் நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
Input & Image courtesy: News