Kathir News
Begin typing your search above and press return to search.

டிஜிட்டல் பரிவர்த்தனையில் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாரான கனரா வங்கி

கனரா வங்கி புதிய கிரெடிட் கார்டு சேவை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. நிர்வாக இயக்குனர் தலைமை செயல் அதிகாரி கே. சத்யநாராயணா ராஜு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

டிஜிட்டல் பரிவர்த்தனையில் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாரான கனரா வங்கி

KarthigaBy : Karthiga

  |  28 Jun 2023 6:15 AM GMT

கனரா வங்கி ரூபே கிரெடிட் கார்டு மூலம் மனிதர்களுக்கு யு.பி.ஐ செலுத்தும் வசதியை கனரா வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி வங்கியின் பிரபலமான 'கனரா ஏஐ1' சூப்பர் செயலியில் கிடைக்கிறது. என்.பி.சி.ஐ உடன் இணைந்து இந்த வசதியை அறிமுகப்படுத்திய முதல் பொதுத்துறை வங்கி கனரா வங்கியாகும். இந்த டிஜிட்டல் முறையானது வாடிக்கையாளர்களை மிக எளிதாக பாதுகாப்பாக கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை செய்ய அனுமதிக்கிறது.


கிரெடிட் கார்டு இணைப்பதற்கான நடைமுறை தற்போதுள்ள கணக்கை இணைக்கும் நடைமுறையை போன்றது தான் யு.பி.ஐ பரிவர்த்தனைகளுக்கு பொருந்தும் வரம்புகள் ரூபே கிரெடிட் கார்டை பயன்படுத்தி யு.பி.ஐ கட்டணங்களுக்கு தொடரும். கிரெடிட் கார்டு யு.பி.ஐ- யில் நேரலையில் இருப்பதால் வாடிக்கையாளர்கள் தங்கள் அட்டையை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.


வணிக விற்பனை நிலையங்களில் பணம் செலுத்துவதில் அதிக நெகிழ்வுத் தன்மையும் விருப்பத்தையும் பெறுவார்கள். ரூபே கிரெடிட் கார்டுகளில் இருந்து யு.பி.ஐ பேமெண்ட் களுக்கு நபருக்கு நபர், காட்டுக்கு கார்டு அல்லது கேஷ் அவுட்டு பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News