Kathir News
Begin typing your search above and press return to search.

உத்திர பிரதேசத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - பா. ஜனதா அபார வெற்றி

உத்திரபிரதேசத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் பா.ஜனதா அபார வெற்றி பெற்றுள்ளது.

உத்திர பிரதேசத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் -  பா. ஜனதா அபார வெற்றி

KarthigaBy : Karthiga

  |  14 May 2023 3:15 AM GMT

உத்திரபிரதேசத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் கடந்த நான்கு மற்றும் பதினோராம் தேதிகளில் நடந்தது. இதில் முக்கியமாக மாநிலத்தின் 17 மாநகராட்சிகளின் மேயர் மற்றும் கவுன்சிலர்களை தேர்வு செய்வதற்கான வாக்கு பதிவு நடந்தது. இந்த வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டன . இதில் மாநிலத்தை ஆளும் பா.ஜனதா அபார வெற்றி பெற்றது.


மொத்தம் உள்ள 17 மாநகராட்சிகளில் பத்தின் முடிவுகள் நேற்று மாலை வரை வெளியாகி இருந்தன. இதில் பத்து மாநகராட்சிகளில் மேயர் பதிவுகளையும் பா.ஜனதா கைப்பற்றியது .அத்துடன் ஏராளமான வார்டுகளிலும் அந்த கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அயோத்தி, ஜான்சி, பரேலி, மதுரா- விருந்தாவன், மொராதாபத், ஷகாரன்பூர், பிரயாக்ராஜ், அலிகார், ஷாஜகான் பூர் மற்றும் காசியாபாத் ஆகிய மாநகராட்சிகளின் மேயர் பதவிகளை பா.ஜனதாவினர் கைப்பற்றினர்.


மீதமுள்ள ஆக்ரா, லக்னோ, கான்பூர், மீரட் பிரோசாபாத், , வாரணாசி, கோரக்பூர் மாநகராட்சிகளிலும் பா.ஜனதாவே முன்னிலை வகித்தனர் . இதனால் அவற்றிலும் பா.ஜ.க.வின் ஆதிக்கம் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5260 உறுப்பினர்கள் 5042 நகர பஞ்சாயத்து தலைவர்கள் 7,104 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலும் நடந்தது.


இந்த தேர்தலில் பதிவான வாக்குகளும் நேற்று எண்ணப்பட்டன. இதிலும் பெரும்பாலான பதிவுகளை பா. ஜனதாவே கைப்பற்றியது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அபார வெற்றியை பரிசளித்ததற்காக மாநில மக்களுக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் உத்தரபிரதேச மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா மகத்தான வெற்றியை பெற்றதற்காக அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை செலுத்திய தொண்டர்கள் மற்றும் நல்லாட்சியை விரும்பும் மக்களுக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள் என பாராட்டியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News