இந்தியாவுக்கான அமெரிக்கா தூதர் எரிக் கார் செட்டி-ஜோபைடன் நியமனம் செய்தார்
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டி என்பவரை ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார்.
By : Karthiga
இந்தியாவுக்கான அமெரிக்க தூதரக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் முன்னாள் மேயர் கார் செட்டியை ஜனாதிபதி நியமனம் செய்துள்ளார். இது மறு நியமனம் ஆகும். ஏற்கனவே கடந்த ஆண்டு அவர் நியமிக்கப்பட்ட அதற்கு அமெரிக்க நாடாளுமன்ற சன்னத் சபையின் ஒப்புதல் பெறப்படாமல் போய்விட்டது.
ஆனால் இந்த முறை செனட் சபையில் இந்த நியமனத்துக்கு ஒப்புதல் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவுடன் ஆன அமெரிக்காவின் உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ள நிலையில், எரிக் கார் செட்டியின் நியமனம் முக்கியத்துவம் பெறுவதாக வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கேரின் ஜீன் பியரே கூறியுள்ளார்.
கடந்த நாடாளுமன்ற செனர் சபையின் ஒப்புதல் பெறாத பல பதிவுகளில் மறு நியமனங்களை அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.