அமெரிக்கா ஈரான் இடையே மோதல் முற்றுகிறது!
அமெரிக்கா ஈரான் இடையே மோதல் முற்றுகிறது!
By : Kathir Webdesk
ஈரான் தலைநகரில் சமீபத்தில் பொருளாதார பின்னடைவு மற்றும் விலை ஏற்றதின்
காரணமாக நடந்த போராட்டத்தில் கடுமையான அமெரிக்கா எதிர்ப்பு பதிவு செய்ய பட்டது.
அமெரிக்கா இரான் இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர ஒத்துலுழைப்பில் இருந்து
விலகி கொண்ட அமெரிக்கா மீண்டும் இரானுக்கு பொருளாதார தடை விதித்ததின் காரணமாக
இந்த போராட்டம் வெடித்திருகிறது. இதன் பின்னணியில் இரான் அமெரிக்காவிற்கு கடும்
எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறது.
பாராக் ஒபாமா அமெரிக்கா அதிபராக இருந்த காலத்தில் அதுவரை ஈரானுடன்
வருடக்கணக்காக இருந்த பகையை மாற்றி இரு நாடுகளுக்கு இடையிலான அணு ஆயுத
உற்பத்தி மற்றும் பயன்பாடு சம்பந்தமாக '"ஒருங்கிணைந்த திட்டமிட்ட நடவடிக்கை '" எனும்
அடிப்படியில் ஈரானின் அணு ஆயுத உற்பத்தியை அணு ஆயுத கூட்டமைப்பின்
கண்காணிப்பில் கொண்டு வந்து ஈரான் மீதான பொருளாதார தடை தளர்த்தப்பட்டது.
அனால் தற்போதைய அதிபர் டிரம்ப் ஈரானின் நடவடிக்கைகளால் ஒபாமா தலைமையில்
ஏற்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி மீண்டும் ஈரானுக்கு பொருளாதாரத்தடை
விதித்துள்ளார். தற்போது நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து வரும் சௌதி எமன் போரும்
எமனுக்கு ஆதரவாக ஈரான் சௌதி எண்ணெய் வயல்கள் மீது நடத்திய தாக்குதல்
பின்னணியில் இந்த பொருளாதார தடையை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.