வெடித்தது உச்சகட்ட மோதல்! சீன தூதரகத்தின் கதவை உடைத்து முன்னேறும் அமெரிக்க காவல்துறை - அடுத்தடுத்து அரங்கேறும் சம்பவங்கள்!
வெடித்தது உச்சகட்ட மோதல்! சீன தூதரகத்தின் கதவை உடைத்து முன்னேறும் அமெரிக்க காவல்துறை - அடுத்தடுத்து அரங்கேறும் சம்பவங்கள்!

அமெரிக்க அதிபர் உத்தரவிட்டதை தொடர்ந்து, சீன தூதரகத்தின் கதவை உடைத்து காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் உள்ளே புகுந்து ஆய்வு மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து அமெரிக்க மற்றும் சீன இடையிலான உறவு, முன்பு இருந்த மோசமான நிலையை விட, அதிமோசமடைந்து வருகிறது.
அமெரிக்காவின் தனிப்பட்ட தரவுகளை திருடுவது, உளவு பார்ப்பது போன்ற குற்றச்சாட்டுகளை சீனா மீது முன்வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள சீனா தூதரகத்தை மூட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
தூதரக செயல்பாடுகளை நிறுத்துமாறு உத்தரவிட்ட சிறிது நேரத்தில், தூதரக ஊழியர்கள் முக்கிய ஆவணங்களை தீயிட்டு எரித்த தகவல் வெளியானது. தீயணைப்பு வாகனங்கள் அங்கு சென்ற நிலையில், தீயணைப்பு வீரர்கள் தூதரகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.
தற்போது ஹூஸ்டன் நகரில் உள்ள சீன தூதரகம் மூடப்பட்டதோடு, அதில் பணி புரிந்தவர்களும் வெளியேறினர். அவர்கள் வெளியேறிய சற்று நேரத்தில், அமெரிக்க அதிகாரிகள் தூதரகத்தின் பின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
சீன தூதரகம், நெடு நாட்களாக உளவு பார்க்கும் மையமாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மருத்துவ ஆராய்ச்சி தகவல்களை திருடுவதற்காக சீன அரசால் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில்துறையில் சீனாவின் தலையீட்டுக்கு வாய்ப்பு ஏற்ப்படுத்தி கொடுத்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வளவு நாட்கள் சீன தூதரக அலுவலகம், அமெரிக்க அதிகாரிகளால் நுழைய முடியாத அளவுக்கு இருந்ததாகவும், பல முக்கிய உளவு வேலைகளை ஒருங்கிணத்து செயல்படுத்தும் தகவல் தொடர்பு மையமாக செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.US-officials-force-their-way-into-Chinese-consulate