Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் 'மதரீதியில் துன்புறுத்தல்' என்ற போலி பிரச்சாரத்தை நிராகரித்த அமெரிக்கா !

இந்தியாவில் மதரீதியில் துன்புறுத்தல் என்ற போலி பிரச்சாரத்தை நிராகரித்த அமெரிக்கா !

Saffron MomBy : Saffron Mom

  |  9 Dec 2021 12:30 AM GMT

அமெரிக்க அரசாங்கம் பத்து நாடுகளை மத சுதந்திரத்தை மிகவும் மோசமாக கடைப்பிடிக்கும் நாடுகளின் பட்டியலில் வைத்துள்ளது. நவம்பர் 17 அன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிலிங்கன் வெளியிட்ட இந்த பட்டியலில் இந்தியாவின் பெயரை இடம்பெறச் செய்வதற்கு பெடரேஷன் ஆஃ இந்தியன் கிரிஸ்டியன் ஆர்கனைசேஷன் (FIACONA), இன்டர்நேஷனல் கிறிஸ்டியன் கான்செர்ன் மற்றும் பல அமைப்புகள் பெரும் முயற்சி செய்தனர். ஆனால் அமெரிக்க அரசாங்கம் கவனமாக ஆய்வு செய்த பின் அவரது வாதங்களை நிராகரித்து இந்தியாவை இந்த பட்டியலில் இணைக்கவில்லை.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புகள் பொது இடங்களில் பல சந்திப்புகளை நிகழ்த்தி, சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க கமிஷனுக்கு (USCIRF) விரிவான விவாதங்களை அளித்து இந்தியாவை இந்த பட்டியலில் இணைக்க பல பரிந்துரைகளும் செய்தது. இதை ஏற்றுக் கொண்ட USCIRF இந்தியாவை இந்த பட்டியலில் இணைக்க வேண்டும் என்று கூறியது. ஆனால் இவ்வாதத்தை அமெரிக்க அரசாங்கம் நிராகரித்துள்ளது. மத சுதந்திரத்திற்கான அரசியல் அமைப்பு மற்றும் சட்டப்பூர்வ பாதுகாப்பு கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளதை இது நிரூபித்துள்ளது.

மேலும் சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஐக்கிய நாடுகள் அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகள் இருக்கும் பொழுது அமெரிக்கா உலகெங்கிலும் உள்ள இறையாண்மை உள்ள நாடுகளின் மத சுதந்திரத்தை கண்காணிக்க சட்டத்தை இயற்றியுள்ளது வினோதமானது. இது தங்களுடைய இலக்குகளுக்கு எதிரான நாடுகள் என்று கருதும் நாடுகளுக்கு எதிரான பிரச்சாரத்தை பல அமைப்புங்களும் பரப்ப உதவி புரிகிறது.

இந்தியாவில் மத ரீதியான துன்புறுத்தல்கள் நடப்பதாக போலி மற்றும் ஜோடிக்கப்பட்ட வழக்குகளை பெர்சிகியூஷன் ரிலீஃப் இந்தியா (Persecution Relief India) போன்ற அமைப்புகள் சமர்ப்பித்தது அமல்படுத்தப்பட்டது. சாதாரண குற்றங்களைக் கூட மதரீதியிலான குற்றங்களாக சித்தரித்து வந்தது தெரியவந்தது.

நவம்பர் 15, 2021ஆம் தேதி அன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலரால் வெளியிடப்பட்ட 'மதசுதந்திரம் குறித்து கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகள்' பட்டியலில் பர்மா, சீனா, ஈரான், வட கொரியா, பாகிஸ்தான், ரஷ்யா, சவூதி அரேபியா, தஜிகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் சிறப்பு கண்காணிப்பில் உள்ள நாடுகளாக அல்ஜீரியா, கியூபா, கொமொரோஸ் மற்றும் நிகரகுவா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

'மதசுதந்திரம் குறித்து கண்காணிக்கப்பட வேண்டிய அமைப்புகள் பட்டியலில் அல்-ஷபாப், போகோ ஹராம், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம், ஹூதிகள், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ்-கிரேட்டர் சஹாரா, ஐஎஸ்ஐஎஸ்-மேற்கு ஆப்ரிக்கா, ஜமாத் நஸ்ர் அல்-இஸ்லாம் வால் முஸ்லிமின் மற்றும் தலிபான்கள் ஆகியவை உள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News