செஸ் வசூல் தொகையை கட்டுமான தொழிலாளர்கள் நலனுக்காக பயன்படுத்துங்கள் பிரதமர் மோடி வேண்டுகோள்.
கட்டுமான தொழிலாளர்கள் நலனுக்காக 38000 கோடி நிதியை பயன்படுத்துங்கள். மாநிலங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
By : Karthiga
கட்டுமான தொழிலாளர்கள் வசூல் மூலம் கிடைத்த 38000 கோடியை அந்த தொழிலாளர்களுக்காக பயன்படுத்துங்கள் என்று மாநிலங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ஏற்பாட்டில் மாநில தொழிலாளர் நலத்துறை மந்திரிகளின் 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது.மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பூபேந்தர் யாதவ் மற்றும் மாநில மந்திரிகள் பங்கேற்றனர். பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடக்க உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:- நாட்டில் தொழிலாளர்களில் கட்டுமான தொழிலாளர்களும் ஒரு அங்கம்.கட்டுமான தொழிலாளர்களுக்காக செஸ் மூலம் வசூலிக்கப்பட்ட நிதி இருக்கிறது.
அதிலுள்ள 38000 ஆயிரம் கோடியை மாநிலங்கள் பயன்படுத்தாமல் அப்படியே இருப்பதாக கேள்விப்பட்டேன். அந்த நிதியை கட்டுமான தொழிலாளர்கள் நலனுக்காக மாநிலங்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
தத்தமது மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் கட்டுமான தொழிலாளர்கள் பலன் அடைவது உறுதி செய்ய வேண்டும் .அந்த தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
வசதியான பணியிடங்களும் வசதியான பணி நேரங்களும் எதிர்காலத்திற்கு தேவை. வீட்டிலிருந்து பணியாற்றும் சூழல் எதிர்காலத்திற்கு அவசியம்.அதைப் பெண் ஊழியர்களுக்கு ஏற்படுத்தி தரவேண்டும்.
இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கு தொழிலாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். அந்த சிந்தனையுடன் அமைப்பு ரீதியான அமைப்புசாரா துறைகளை சேர்ந்த கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்காக நாடு பணியாற்றி வருகிறது.கொரோனா காலத்தில் அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் மூலம் ஒன்றரை கோடி மூலம் வரக்கூடிய வேலைவாய்ப்புகள் காப்பாற்றப்பட்டன.
இன்று பொருளாதாரம் வேகமாக வளரும் நாடாக இந்தியா இருப்பதற்கான பெருமை அவர்களையே சாரும் கடந்த எட்டு ஆண்டுகளில் ஆங்கிலேயர் கால சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.