ஏற்கனவே தூர்வாரிய குளத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின் - தேர்தலுக்கு ஒப்பேத்த முட்டு கொடுக்கும் உடன் பிறப்புக்கள்.!
ஏற்கனவே தூர்வாரிய குளத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின் - தேர்தலுக்கு ஒப்பேத்த முட்டு கொடுக்கும் உடன் பிறப்புக்கள்.!
By : Kathir Webdesk
ஈரோடு மாவட்டத்தில், திமுக மாவட்ட செயலாளர் ஏற்கனவே தூர்வாரிய குளத்தை உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தது அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கொங்கு மண்டலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கட்சி சார்பில் பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொண்டார். ஈரோடு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமியால் தூர்வாரப்பட்ட கொடுமுடி கவுண்டம்பாளையம் குளத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அதிமுகவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திலேயே கோலோச்சியவர் முத்துசாமி, இன்று சமீபத்தில் முளைத்த காளானுக்கு எல்லாம் காவடி தூக்குவது அவருடைய அரசியல் பாரம்பரியத்துக்கு நல்லாவா இருக்கு என்று அப்பகுதி மக்களே வருத்ததுடன் தெரிவித்துள்ளனர்.
மேலும், அம்மா அவசரப்பட வேண்டாம் என்று சொல்லியும் திமுகவுக்கு சென்ற முத்துசாமி இன்று உண்மையிலேயே நொந்து இருப்பார் என்று ஆதங்கத்துடன் கூறினர்.