Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் 12-18 வயது குழந்தைகளுக்காக வரவுள்ள முதலாவது கொரோனா தடுப்பூசி !

இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிப்பதற்காக கூடுதல் தரவுகள்கேட்கப்பட்டு அவையும் சமர்க்கப்பட்டு விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவில் 12-18 வயது குழந்தைகளுக்காக வரவுள்ள முதலாவது கொரோனா தடுப்பூசி  !
X

G PradeepBy : G Pradeep

  |  18 Aug 2021 8:04 AM GMT

இந்தியாவில் கொரோனாவின் இரண்டு அலைகளும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது.

நமது நாட்டில் கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டு தயாரிப்புகளான கோவிஷீல்டு, கோவேக்சின் மற்றும் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி, அமெரிக்காவின் மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் என 5 தடுப்பூசிகளுக்கு அவசர பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 6-வது தடுப்பூசியாக ஆமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி தடுப்பூசி வரவுள்ளது. இந்த தடுப்பூசிக்கு இம்மாத இறுதியில் ஒழுங்குமுறை ஒப்புதல் கிடைத்து விடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தடுப்பூசிதான் இந்தியாவில் 12-18 வயது குழந்தைகளுக்காக வரவுள்ள முதலாவது கொரோனா தடுப்பூசி ஆகும்.

இந்த தடுப்பூசியின் அவசர பயன்பாட்டு ஒப்புதலுக்காக கடந்த மாதம் 1-ந் தேதி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிப்பதற்காக கூடுதல் தரவுகள்கேட்கப்பட்டு அவையும் சமர்க்கப்பட்டு விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த தடுப்பூசி ஊசி இல்லாத இன்ஜெக்டரைப் பயன்படுத்தி போடப்படும். இதனால் பக்க விளைவுகளும் குறைவு ஆகும். 50 இடங்களில் இந்த தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளது. 12-18 வயது பிரிவில் பரிசோதிக்கப்பட்ட முதல் தடுப்பூசியும் இது ஒன்றுதான்.

1000 குழந்தைகள் உள்பட 28 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பூசி போட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது.

Image : Abplive

Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News