மக்களுக்கான விஷயத்தில் தமிழ்நாட்டின் முதல் எம்.எல்.ஏ என்ற பெருமையை தட்டி தூக்கிய வானதி சீனிவாசன் - எதில் தெரியுமா?
கோவையில் புதிய முயற்சியாக மக்களுக்காக தேவைகளை பூர்த்தி செய்ய 'நடமாடும் சேவை வாகனத்தை' கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்
By : Mohan Raj
கோவையில் புதிய முயற்சியாக மக்களுக்காக தேவைகளை பூர்த்தி செய்ய 'நடமாடும் சேவை வாகனத்தை' கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஏற்பாடு செய்ய மாநில பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விழாவில் கலந்து கொண்டு துவங்கி வைத்துள்ளார்.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி மக்களுக்காக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் 'நமக்காக நம்ம எம்.எல்.ஏ' என்ற தலைப்பில் நடமாடும் சேவை வாகன வசதி ஒன்றை ஏற்படுத்தியுள்ளார். இதன்மூலம் மக்களின் தேவைகளை கண்டறிந்து உடனடியாக அதற்க்கு உதவும் வகையில் திட்டமிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வாகனம் குறித்த செயல்பாடுகள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும். அதனால் மக்கள் வைக்கும் கோரிக்கைகள், அவர்களுக்கான சேவைகள் தினமும் உடனுக்குடன் கண்கணிக்கப்பட்டு துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த புதிய முயற்சியை தமிழ்நாட்டில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமை வானதி சீனிவாசனுக்கு கிடைத்துள்ளது.
இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது அதில் கலந்துகொண்டு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இந்த வாகனத்தை திறந்து வைத்தார். மேலும் திறந்து வைத்து பேசிய அவர், 'எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அவர்களின் இந்த புதிய முயற்சியானது மக்களுக்கு கண்டிப்பாக நன்மையை தரும் மற்றும் மக்களுக்கும் எம்.எல்.ஏ'விற்கும் உள்ள தொடர்பு இன்னும் அதிகரிக்கும்' என்றார். மேலும், 'இதுபோன்ற நவீன தொழில்நுட்பம் சார்ந்த நவீன நடவடிக்கைகள் மக்களிடம் விரைவில் சென்றடையும்' என்றார்.
இந்த விழாவில் கோவை பா.ஜ.க மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி, மாநில பொது செயலாளர் A.P முருகானந்தம், மாநில பொருளாளர் S.ர்.சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.