Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னையில் தயாரிக்கப்பட்ட மின்னல் வேக ரயிலை கொச்சைப்படுத்திய ராகுல் : வெற்றிகரமாக தனது முதல் நாள் பயணத்தை முடித்து சாதனை

சென்னையில் தயாரிக்கப்பட்ட மின்னல் வேக ரயிலை கொச்சைப்படுத்திய ராகுல் : வெற்றிகரமாக தனது முதல் நாள் பயணத்தை முடித்து சாதனை

சென்னையில் தயாரிக்கப்பட்ட மின்னல் வேக ரயிலை கொச்சைப்படுத்திய ராகுல் : வெற்றிகரமாக தனது முதல் நாள் பயணத்தை முடித்து சாதனை

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Feb 2019 6:26 PM GMT


பாரத நாட்டின் அதிவேக மின்னல் ராயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், பாரத பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தனது முதல் வர்த்தக பயணத்தை நேற்று தொடங்கியது.


டெல்லியில் இருந்து நேற்று வாரணாசிக்கு புறப்பட்டுச் சென்றது. அடுத்த இரு வாரங்களுக்கு இந்த ரயிலின் டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.


பயணிகளின் பயண நேரத்தைக் குறைக்கும் நோக்கில், மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய ரயிலை சென்னை ஐ.சி.எஃப் தொழிற்சாலை தயாரித்தது. ரயிலில் இன்ஜின் இல்லாமல் அதிவேகமாக இயங்கக்கூடிய இந்த ரயிலுக்கு வந்தே பாரத் எனப் பெயரிபட்டது.


டெல்லியில் வெள்ளிக்கிழமை நடந்த விழாவில் பிரதமர் மோடி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். டெல்லியிலிருந்து உத்தரப் பிரதேசத்தின் வாராணசி வரையிலான தனது முதல் பயணத்தை வந்தே பாரத் ரயில் தொடங்கியது.


டெல்லியில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில் வெற்றிகரமாக வாரணாசி சென்றடைந்த நிலையில், வாரணாசியில் இருந்து புறப்பட்டு டெல்லிக்கு வந்தது. அப்போது, டெல்லிக்கு முன்பாக 200 கி.மீ. தொலைவில் டுன்ட்லா எனும் இடத்தில் ரயில் பழுதடைந்து நின்றது.


இந்நிலையில், ரயிலில் இருந்த பழுது உடனடியாக நீக்கப்பட்டு நேற்று தனது முதல் வர்த்தக பயணத்தை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கியது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட பழுது குறித்து ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், "வாரணாசியில் இருந்து டெல்லிக்கு வரும் வழியில் டுண்டுலா ரயில் நிலையத்துக்கு அருகே 18 கி.மீ தொலைவில் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோது பழுது ஏற்பட்டது. ரயில் வரும் பாதையில் கால்நடை குறுக்கிட்டதால், பிரேக் போடப்பட்டது. அப்போது ரயிலில் பிரேக் பகுதியில் பழுது ஏற்பட்டது. அதன்பின் சரி செய்யப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டது.




https://twitter.com/RailMinIndia/status/1096680838048018432?s=19


இது குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவெளியிட்டு ட்விட் செய்துள்ளார். அதில், " வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு இன்று தனது முதல் வர்த்தகப் பயணத்தை தொடங்கியது. அடுத்த இரு வாரங்களுக்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன." எனத் தெரிவித்துள்ளார்.




https://twitter.com/PiyushGoyal/status/1096956013880770560?s=19


இதற்கிடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பழுது ஏற்பட்டது குறித்து ட்விட்டரில் ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருந்தார். அதில், "மோடிஜி, மேட் இன் இந்தியா குறித்து தீவிரமாகச் சிந்திக்க வேண்டியது அவசியம் என நினைக்கிறேன். இது தோல்வியில் முடிந்தது எனப் பெரும்பாலானவர்கள் உணர்கிறார்கள். இதை எவ்வாறு செய்வது என்று காங்கிரஸ் கட்சி சிந்திக்கும் என நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் " எனத் தெரிவித்திருந்தார்.




https://twitter.com/RahulGandhi/status/1096805701954031617?s=19


தமிழர்களின் கடும் உழைப்பில் சென்னையில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலை ராகுல் காந்தி கீழ் தரமாக விமர்சித்தது தமிழர்களை கொதிப்படைய செய்தது.


இதற்கு சரியான பதிலடி கொடுத்து பியூஷ் கோயல் ட்வீட் செய்து "இந்திய பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் கடின உழைப்பை தாக்கிப் பேசுவது மிகவும் வெட்கக்கேடானது. இந்த மனப்போக்கை மாற்றுங்கள். மேக் இன் இந்தியா வெற்றிகரமானது, கோடிக்கணக்கான இந்தியர்கள் வாழ்வு பெறுகிறார்கள். உங்கள் குடும்பம் 60 ஆண்டுகளாக என்ன சிந்தித்தது" எனத் தெரிவித்தார்.




https://twitter.com/PiyushGoyal/status/1097115040681996288?s=19


சென்னையில் "மேக் இன் இந்தியா" திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் மின்னல் வேக ராயிலான வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்தவர்கள் தங்களின் பயண அனுபவத்தை பகிர்ந்து, இந்தியாவிற்கு இது பெருமை மிகு பயணம் என்று தெரிவித்து வருகின்றனர்.




https://twitter.com/CPRONCR/status/1097136326246166528?s=19




https://twitter.com/aviralrashtriya/status/1097014228001509377?s=19




https://twitter.com/tejasrangnekar/status/1097033139745103873?s=19




https://twitter.com/CSSunitaM/status/1097187513523888128?s=19




https://twitter.com/AnupamkPandey/status/1097104110363455489?s=19

Next Story
கதிர் தொகுப்பு
Trending News