விமானத்தில் சென்றவர்கள் கூட விரும்பும் ரயில் பயணம்: கவர்னரால் புகழப்பட்ட வந்தே பாரத் ரயில்!
விமானத்தில் சென்றவர்கள் கூட வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்ய விரும்புகிறார்கள் என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.
By : Karthiga
உலகப் புகழ்பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஒன்றாக சென்னை ஐ.சி.எப். விளங்குகிறது தற்போது நாட்டிலேயே அதிக வேகத்தில் இயங்கும் வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் கவனம் செலுத்தப்படுகிறது. கடந்த சனிக்கிழமை 25 ஆவது வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு வெளிய அனுப்பப்பட்டது. 25- வது வந்தே பாரத் ரயில் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டதை அடுத்து அதிகாரிகளும் ஊழியர்களும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
இந்த நிலையில் தெலுங்கானா கவர்னர் புதுச்சேரி துணைநிலை கவர்னருமான தமிழிசை சௌந்தரராஜன் நேற்று பெரம்பூரில் உள்ள ஐ. சி. எஃப்.க்கு வருகை தந்தார். அப்போது அங்கு தயாரிப்பில் உள்ள வந்தே பாரத் ரயில் பெட்டிகளை பார்வையிட்டார். பின்னர் வந்தே பாரத் ரயிலின் வசதியான இருக்கைகள், பயணிகள், ரயில் ஓட்டுநருடன் அவசர காலங்களின் போது பேச வசதியாக அமைக்கப்பட்டுள்ள டாப் பேக் சிஸ்டம், சார்ஜிங் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கழிவறை போன்ற வசதிகளை பாராட்டினார்.
வந்தே பாரத் ரயிலை தயாரித்து அனுப்பியதற்காக ஐ.சி.எப் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பாராட்டினார். இதை தொடர்ந்து தமிழிசை சௌந்தர்ராஜன் நிருபர்களிடம் கூறிய ததகவல்கள் யாதெனில், அனைத்து நகரங்களையும் இணைக்கும் வந்தே பாரத் ரயிலில் மக்கள் மிகவும் அதிக அளவில் பயணம் செய்கிறார்கள். விமானத்தில் பயணம் செய்தவர்கள் கூட இதில் அதே வசதி இருப்பதால் வந்தே பாரத் ரயிலில் பயணிக்க விரும்பி வருகிறார்கள் . அனைத்து வசதிகளும் மிக சிறப்பாக இருக்கிறது. சிறப்பான திட்டமிடலின் மூலம் ரயிலை தயாரித்து வருகிறார்கள்.
இதுவரை 71 ஆயிரத்திற்கும் மேலான ரயில் பெட்டிகளை தயாரித்து உலகின் தலைசிறந்த ரயில் பெட்டி தொழிற்சாலையாக விளங்குவது தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வில் ஐ.சி.எஃப் பொது மேலாளர் பி .ஜி. மல்லையா முதன்மை தலைமை இயந்திரவியல் இன்ஜினியர் சீனிவாஸ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.