Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை சென்ட்ரல் - மைசூர் இடையே 'வந்தே பாரத்' ரயில் 11-ஆம் தேதி முதல் சேவை - பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை சென்ட்ரல் மைசூர் இடையே நடைபெற்றது

சென்னை சென்ட்ரல் - மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் 11-ஆம் தேதி முதல் சேவை - பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

KarthigaBy : Karthiga

  |  8 Nov 2022 6:30 AM GMT

இந்திய தொழில்நுட்பத்தில் அதிநவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்களுக்கான பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. புல்லட் ரயில் போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்த வந்தே பாரத் ரயில்கள் 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 50 வினாடிகளில் எட்டி விடக் கூடியவை. அதேபோல் 160 கிலோமீட்டர் வரையிலான வேகத்திலும் செல்லக்கூடியவை.நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை டெல்லியில் இருந்து வாரணாசிக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இதுவரை இந்தியாவில் நான்கு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. குஜராத் மாநிலம் காந்தி நகரில் இருந்து மராட்டிய மாநிலம் மும்பை வரை இயங்கும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த வரிசையில் ஐந்தாவது வந்தே பாரத் ரயில் சென்னை- மைசூர் இடையே இயக்கப்பட உள்ளது.


தென்னிந்தியாவின் முதலாவது வந்தே பாரதி ரயில் சேவையை வருகிற 11-ம் தேதி பிரதமர் மோடி மைசூருவில் தொடங்கி வைக்கிறார். இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நடந்தது. சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 5.50 மணிக்கு மைசூர் புறப்பட்டது. இந்த சோதனை ஓட்டத்தை தெற்கு ரயில்வேயில் பொது மேலாளர் பி. ஜி மல்யா தொடங்கி வைத்தார். சென்னையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பெங்களூருக்கு காலை 10:25 மணிக்கும் மைசூருக்கு மதியம் 12:30 மணிக்குள் சென்றடைந்தது. வழக்கமாக சென்னை மைசூர் இடையே இயக்கப்படும் அதிவேக ரயில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் 7.15 மணி நேரத்தில் இலக்கை சென்றடையும்.ஆனால் வந்தே பாரத்ரையில் அரை மணி நேரம் முன்கூட்டியே அந்த இலக்கை சென்று அடைந்தது. 110 கிலோமீட்டர் வேகத்தில் வந்தே வாரத்தில் சோதனை நடத்தப்பட்டது. படிப்படியாக இது 160 கிலோமீட்டர் வரை அதிகரிக்கப்படும். இதன் மூலம் பயணிகளின் நேரம் மிச்சமாகும் .வாரத்தில் புதன்கிழமை தவிர மற்ற ஆறு நாட்களும் சென்னை மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படும்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News