Kathir News
Begin typing your search above and press return to search.

அடுத்த ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும் படுக்கை வசதி கொண்ட 'வந்தே பாரத் ரயில்கள்'

படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என ஐ.சி எஃப் பொது மேலாளர் மால்யா தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள்
X

KarthigaBy : Karthiga

  |  16 Aug 2023 6:15 AM GMT

சென்னை பெரம்பூர் ஐ.சி எஃப்.ஆலையில் 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பொது மேலாளர் மால்யா தேசியக்கொடியை ஏற்றி வைத்து பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் ஐ.சி.எப். அதிகாரிகள் பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில் பொது மேலாளர் மால்யா பேசியதாவது:-


ரயில்வே வாரியம் நிர்ணயத்த இலக்கின்படி கடந்த ஆண்டில் 261 எல்.எச்.பி வகை பெட்டிகள் உட்பட 272 ரயில் பெட்டிகளை பெரம்பூர் ஐ.சி.எப் தயாரித்துள்ளது. இந்த ஆண்டில் 3,241 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. இதில் 30 வந்தே பாரத் ரயில்களும் அடங்கும். வந்தே பாரத் ரயிலைப் போன்ற வசதிகளை கொண்ட குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண கட்டண ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் முன்புறம் பின்புறமும் இன்ஜின்கள் பொருத்தப்பட்டிருக்கும். இதனால் இந்த ரயிலே வேகமாக இயக்க முடியும்.


இதே போல் வந்தே மெட்ரோ ரயில்கள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் தயாரிக்க உள்ளோம் . தானியங்கி கதவுகள் உட்பட பல்வேறு வசதிகள் இதில் இருக்கும். நீண்டதூர பயணத்திற்கான படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தயாரித்து பயன்பாட்டிற்கு வரும். மேலும் எளிதில் அழுகக்கூடிய பொருட்களை பாதுகாப்பாகவும் விரைவாகவும் கொண்டு செல்லும் வகையில் குளிர்சாதன வசதி கொண்ட கதிசக்தி சரக்கு ரயில்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்.


ஜம்மு காஷ்மீர் ரயில் தளத்தில் விரைவாக பயணிக்க உதவும் தயாரிக்க உள்ளோம். இந்த ரயிலில் நீர் குழாய்கள் உரைந்து வெடிக்காமல் இருக்க சிறப்பு அமைப்புகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் குளிர்காலத்தில் பயணிகள் வசதியாக பயணிக்க வெப்ப அமைப்பு இருக்கும் இந்த ரயில் அடுத்த ஆண்டு தயாரிக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News