பாதிரியார்களால் அதிகரிக்கும் பாலியல் தொல்லை: வாடிகனில் புதிய சட்டம்.!
சிறுமிகள் மட்டுமின்றி வயது வந்தோருக்கும் பாதிரியார்களால் பாலியல் அத்துமீறல் தருவதை, கிரிமினல் குற்றமாக்கும் சட்ட திருத்தம் வாடிகன் நகரில் அமலுக்கு வந்துள்ளது. பல்வேறு நாடுகளில் பாதிரியார்கள் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கின்றனர். இதனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு நியாயம் கிடைக்கவிடாமல் பாதிரியார்கள் செய்து விடுகின்றனர்.
By : Thangavelu

இது போன்ற பாலியல் அத்துமீறலுக்கு ஐரோப்பாவின் இத்தாலியில் உள்ளது வாடிகன் நகரம். அங்கு கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தரும் பாதிரியார்கள் மீது வழக்கு பதிவு செய்யும் புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளார்.
சிறுமிகளுக்கு மட்டுமின்றி, வயது வந்த பெண்களுக்கும் பாதிரியார்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர். அது போன்ற பாதிரியார்கள் மீது கிரிமினல் குற்றமாக வழக்கு பதிவு செய்யப்படுவதற்கான சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது போன்ற சட்டத்தை உலகம் முழுவதும் உள்ள பாதிரியார்களுக்கும் பொருந்தும் அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது ஒட்டு மொத்த பெண்களின் கோரிக்கையும் ஆகும்.