கன்னியாஸ்திரிகளின் பாலியல் புகாரை காலில் போட்டு மிதித்தது வாட்டிகன் திருச்சபை!
கன்னியாஸ்திரிகளின் பாலியல் புகாரை காலில் போட்டு மிதித்தது வாட்டிகன் திருச்சபை!

கேரளாவைச் சேர்ந்த, முன்னாள் கத்தோலிக்க பிஷப், பிரான்சிஸ் முல்லக்கல் என்பவர் கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இவர் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு போதுமான முகாந்திரங்கள் இருந்ததை அடுத்து பிஷப் பிரான்சிஸ் கைது செய்யப்பட்டார். பின்னர் திருச்சபையில் இருந்த ஆணாதிக்க வெறி மற்றும் திருச்சபைக்கு இருந்த அரசியல் செல்வாக்கு காரணமாக அவர் ஜாமினில் வெளி வந்தார்.
இந்த நிலையில் மீண்டும் பிரான்சிசை கைது செய்யக் கோரி, கன்னியாஸ்திரிகள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில், கன்னியாஸ்திரி, லுாரி களப்புரா, 53, என்பவரும் பங்கேற்றார்.இதன் காரணமாக, கேரள கத்தோலிக்க திருச்சபை சார்பில், அவர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் தேவாலயப் பணிகளில் ஈடுபடக் கூடாது என, உத்தரவிட்டது.
இந்நிலையில், கேரள அரசு நடத்திய, 'பெண்கள் சுவர்' போராட்டத்துக்கு ஆதரவாக, கன்னியாஸ்திரி லுாசி, கருத்து தெரிவித்தார்.இது, மதக்கோட்பாட்டுக்கு எதிரானது என குற்றம் சாட்டி, கன்னியாஸ்திரியிடம் விளக்கம் கேட்டு, திருச்சபை சார்பில், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.
இதற்கு, லுாசி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டும், அது திருப்திகரமாக இல்லை என கூறி, திருச்சபையில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இதற்கு எதிராக, ஐரோப்பிய நாடான வாட்டிகனில் உள்ள, கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகத்தில், லுாசி மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டை, வாட்டிகன் திருச்சபை, நிராகரித்தது. கன்னியாஸ்திரி லூசியும் 2 வது முறையாக மேல் முறையீட்டு மனுவை அனுப்பி வைத்தார். ஆனால் அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது எனக் கூறி வாட்டிகனில் இருந்து கடிதம் வந்துள்ளது. இரண்டாவது மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் திருச்சபையை விட்டு வெளியேறுவதை தவிர வேறுவழி இல்லை என்று ஆனதால் கன்னியாஸ்திரிகள் அச்சம் அடைந்துள்ளனர். திருச்சபைகளில் நிலவும் ஆணாதிக்கம், பெண்களை பாலியல் கொடுமை செய்தும் தட்டிக் கேட்க சட்டம் இல்லாதது ஆகியவை குறித்து கிறிஸ்தவ பெண்கள் புலம்ப தொடங்கிவிட்டனர்.
சமீபத்தில் ஸ்பீகல் ஆன்லைன் (Spiegel Online) மற்றும் டை செய்ட் (Die Zeit) என்ற ஜெர்மனி பத்திரிகைகள் ஜெர்மனியில் 1946-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கத்தோலிக்க பாதிரிகளால் சுமார் 3,677 பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் என்கிற அதிர்ச்சிகரமான தகவலை சென்ற ஆண்டு வெளியிட்டன.
ஏனெனில் திருச்சபைக்குள் நடக்கும் அட்டூழியங்களை வேறு எந்த கோர்ட்டும் விசாரிக்க முடியாது.இந்திய குற்றவியல் நடைமுறை சட்டங்களின் கீழ் கூட விசாரிக்க முடியாது. இதே இந்து கோவிலில் இது போன்ற சம்பவம் நடைபெற்றால் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டங்களின் கீழ் விசாரிக்க முடியும். அதனால்தான் உலகெங்கும் பாதிரியார்களின் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான பாலியல் பலாத்கார புகார்கள் அதிகம் வருகின்றன.
திருச்சபை கன்னியாஸ்திரீ இந்திய நாட்டு பிரஜை என்றாலும் அவருக்கு இந்திய சட்டங்கள் உதவவில்லை. இந்த நிலையில்தான் மோடி அரசு அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டத்தைகொண்டு வர விரும்புகிறது. திருச்சபைகள் மோடி அரசை எதிர்ப்பதற்கு காரணமும் தங்கள் ஆணாதிக்கம் முடிவுக்கு வரக் கூடாது என்பதற்குதான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.