வேலூர் இப்ராஹிமுக்கு வாட்ஸ்அப்பில் வந்த கொலை மிரட்டல் - நடவடிக்கையில் இறங்கிய காவல்துறை
சிறுபான்மையினருக்கு நன்மை செய்யாதது தி.மு.க என வேலூர் இப்ராஹிம் குற்றம் சுமத்தியுள்ளார்.
By : Mohan Raj
சிறுபான்மையினருக்கு நன்மை செய்யாதது தி.மு.க என வேலூர் இப்ராஹிம் குற்றம் சுமத்தியுள்ளார்.
கோவையில் பா.ஜ.க சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கிறிஸ்துவ பாதிரியார் பிரின்ஸ் தளியதை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது சிறுபான்மையினர் நலன் கருதி பா.ஜ.க அரசு செயல்படுத்தும் திட்டங்கள் பற்றி விளக்கினார். பின்னர் வேலூர் இப்ராஹிம் கூறியதாவது, 'சிறுபான்மை மக்களை பா.ஜ.க கட்சியில் இணைக்கும் நோக்கத்துடன் கோவை வந்துள்ளேன் தற்போது 20 பேர் இணைந்துள்ளனர் மேலும் பலர் இந்த மாத இறுதியில் நடக்கும் விழாவில் பாதிரியார் முன்னிலையில் பா.ஜ.க'வில் இணைகின்றனர்.
தமிழகத்தில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடக்கிறது தி.மு.க அரசு சிறுபான்மையினருக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை ஆனால் மத்திய அரசு நன்மைகளை செய்துள்ளது பிரதமர் மோடி சிறுபான்மையினர் கல்விக்காக மட்டும் 5,126 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார் என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் நான் கோவை கணபதியில் இருந்தபோது என் மொபைல் எண்ணுக்கு வாட்ஸ்அப் வாயிலாக ஆடியோ மெசேஜ் வந்தது அதில் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது அந்த கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளேன்' என்றார். மேலும் அதன் மீது உரிய நடவடிக்கை போலீசார் எடுத்து வருகின்றனர் என்றார்.