முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி - துணை ஜனாதிபதி வெளியிட்ட தகவல்!
முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி - துணை ஜனாதிபதி வெளியிட்ட தகவல்!
By : Kathir Webdesk
முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி, சமீப காலமாக ஓய்வில் இருந்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து டயாலிசிஸ் செய்து வந்தார்.
இந்நிலையில், அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டு உள்ளார். மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதயம் மற்றும் நரம்பியல் மைய தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி நேற்று மருத்துவமனைக்கு சென்று அருண்ஜெட்லியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும் உள்துறை மந்திரி அமித்ஷா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள் ஹர்ஷ்வர்தன், அஷ்வினி சவுபே ஆகியோரும் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர்.
இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கேட்டறிந்தார். தற்போது அருண் ஜெட்லியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.