Kathir News
Begin typing your search above and press return to search.

ராமர் கோவில் அடித்தளத்திற்கு புனித நீர் மற்றும் மண் அனுப்பும் VHP - பூமி பூஜை பணிகள் தீவிரம்.!

ராமர் கோவில் அடித்தளத்திற்கு புனித நீர் மற்றும் மண் அனுப்பும் VHP - பூமி பூஜை பணிகள் தீவிரம்.!

ராமர் கோவில் அடித்தளத்திற்கு புனித நீர் மற்றும் மண் அனுப்பும் VHP - பூமி பூஜை பணிகள் தீவிரம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 July 2020 9:07 AM GMT

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான முதல் படியாக வரலாற்று சிறப்புமிக்க பூமி பூஜை நிகழ்வை சிறப்பான முறையில் நடத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் அயோத்தியில் கட்டப் போகும் கோவிலின் அடித்தளத்தில் பயன்படுத்துவதற்காக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு 11 புனித இடங்களிலிருந்து மண் எடுத்து அயோத்திக்கு அனுப்பி வைத்துள்ளது.

ராமஜென்ம பூமி இயக்கத்தை முன்னின்று வழி நடத்திய விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு 11 இந்து, சமண மற்றும் சீக்கிய புனித தலங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் மற்றும் மண்ணை அயோத்திக்கு அனுப்பி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த பதினோரு புனித வழிபாட்டுத்தலங்கள் பின்வருமாறு:

சித்த கல்கா பீடம்

பைரவர் ஆலயம்

ஷீஷ் கஞச் குருத்வாரா

கௌரி சங்கர் ஆலயம்

ஸ்ரீ திகம்பர் ஜெய்ன் லால் ஆலயம்

பிரச்சின் ஹனுமான் ஆலயம்

பிரச்சின் ஷிவ் நவக்ரஹ ஆலயம்

பிரச்சின் காளி மாதா ஆலயம்

ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் ஆலயம் (பிர்லா மந்திர்)

பகவான் வால்மீகி ஆலயம்

பத்ரி பகத் ஜந்தேவலன் ஆலயம்

இது தவிர நாடெங்கும் இருக்கும் பல ஆறுகளில் இருந்து புனித நீர் எடுக்கப்பட்டு அதுவும் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பயன்படுத்த அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமை இடத்தில் இருந்தும் எடுக்கப்பட்டு பூமி பூஜைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாக்பூர் அருகில் உள்ள ராம்டெக் ஆலயத்தில் இருந்து பிடி மண்ணும் அதற்கு அருகே உள்ள ஐந்து நதிகள் சேரும் இடத்திலிருந்து புனித நீரும் எடுக்கப்பட்டு அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விஹெச்பி நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு இந்திய மக்களுக்கு இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு ஆகஸ்ட் 5-ஆம் தேதி பெரிய அளவில் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. விஹெச்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் ராம பக்தர்களின் 500 ஆண்டு கால பொறுமைக்கு பலன் கிடைக்க உள்ளதாகவும் பூமி பூஜை நிகழ்வு இதற்கு முடிவு கட்டும் வகையில் அமையப் போகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. "இந்து எழுச்சியின் தருணமாகக் கருதப்படும் இந்த நிகழ்வை ஒவ்வொரு குடும்பமும் பார்த்து மகிழ வேண்டும் என்பது எங்கள் விருப்பம்" என்று விஹெச்பி செயல் தலைவர் அலோக் குமார் கூறியுள்ளார்.

கோவில் அறக்கட்டளை உறுப்பினர்களுடன் பிரதமர் மோடியும் பங்கேற்க உள்ள இந்த நிகழ்வை மக்கள் அவர்களது வீடுகளை அலங்கரித்தும் தீபாராதனை காட்டியும் ஆன்மீக பாடல்கள் பாடியும் கொண்டாட வேண்டும் என்று விஹெச்பி பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் ஆகஸ்ட் 5-ஆம் தேதி அயோத்தியில் நடக்கவிருக்கும் ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் கலந்துகொண்டு சடங்குகளைச் செய்ய உள்ளனர்.

நன்றி : Opindia

Next Story
கதிர் தொகுப்பு
Trending News