Kathir News
Begin typing your search above and press return to search.

விஜயின் பிகில் இசை வெளியீட்டு விழா பரிதாபங்கள்! வைரலானது கண்ணீர் வீடியோ!!

விஜயின் பிகில் இசை வெளியீட்டு விழா பரிதாபங்கள்! வைரலானது கண்ணீர் வீடியோ!!

விஜயின் பிகில் இசை வெளியீட்டு விழா பரிதாபங்கள்! வைரலானது கண்ணீர் வீடியோ!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Sep 2019 9:46 AM GMT


நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் அருகே சோமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று நடந்தது.


இதில் நடிகர் விஜய், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகை நயன்தாரா உள்பட ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்துகொள்வதாக ஏற்கனவே விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது.


இதனால், இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆயிரம், இரெண்டாயிரம் என பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி ரசிகர்கள் குவிந்தனர்.


சென்னையில் இருந்து மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் வந்தனர். கேரளாவில் இருந்தும் வந்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட ரசிகர்களும் மதியம் முதலே தாம்பரத்தில் குவியத்தொடங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


மாலை நேரத்திலிருந்து போக்குவரத்து நெரிசல் அதிகமானது. தாம்பரம் முதல் சோமங்கலம் வரை போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள், கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். ஆம்புலன்ஸ் வாகனமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவித்தது.


இது ஒருபுறம் இருக்க, 10000 இருக்கைகள் கொண்ட அரங்கத்தில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் மனசாட்சியே இல்லாமல் 20000 ஆயிரம் டிக்கெட்டுகளை விநியோகித்துள்ளனர் அதுவும் பணத்திற்கு விற்றுள்ளனர். அனைவருமே விஜயின் தீவிர ரசிகள்தான் டிக்கெட்டுகளை பணம் கொடுத்து வாங்கியுள்ளனர்.


20000 டிக்கெட்டுகளை விற்றுவிட்டு, 10000 இருக்கைகளுடன் அரங்கத்தை தயார் செய்திருந்தது மிகப்பெரிய பித்தலாட்டம். இது திட்டமிட்டே செய்யப்பட்டது என்கின்றனர் விவரமறிந்தவர்கள்..




https://twitter.com/News18TamilNadu/status/1174904634046996480?s=08


அதாவது, ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது, அரங்கத்தில் இடம் இல்லாமல் ரோட்டில் நின்றனர் என்று செய்தியை பரப்ப வேண்டுமென்பதே நடிகர் விஜயின் நோக்கம் என்கின்றனர்.


இதனால் டிக்கெட் வாங்கியும், அரங்கத்தினுள் அனுமதிக்காததால் ரசிகள் ஆவேசமடைந்தனர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். இதில் பல ரசிகர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த விஜய் ரசிகர்கள், தாங்கள் பணம் கொடுத்து வாங்கிய டிக்கெட்டுகளை கிழித்து எறிந்தனர்.




https://twitter.com/Ajithfankum/status/1174921510068219905


இதைவிட அனைவரையும் கோபடையச் செய்தது 2000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிய சிறுவனை உள்ளே அனுமதிக்காததுதான். அந்த சிறுவனின் மழலை ஏக்கத்தை வெளிப்படுத்தும் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.


அந்த சிறுவன் கூறியதாவது:-


நான் மத்தியானம் 2 மணியில் இருந்து இங்கே இருக்கிறேன். எங்க அப்பாவிடம் பணம் வாங்கி 2000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி இருக்கிறேன். ஆனால் என்னை உள்ளே விடவில்லை. இவர்கள் செய்வது ரொம்ப தப்பு சார். இவர்கள் இனி எங்கே விழா வைத்தாலும்... பீச்சில் வைத்தாலும், தங்க தாஜ்மகாலில் வைத்தாலும் யாருமே வரமாட்டார்கள் சார். கேரளா எல்லையில் இருந்து ஒரு அண்ணா இங்கே வந்திருக்கிறாங்க. அவங்களும் 2 மணிக்கே வந்திருக்கிறாங்க. அவங்களையும் உள்ளே விடவில்லை. இதெல்லாம் ரொம்ப தப்பு சார்.


இவ்வாறு அந்த சிறுவன் தனது ஆத்திரத்தை கொட்டி தீர்த்துள்ளார்.




https://twitter.com/RajaaTweetz/status/1174909799546228737



விஜயின் பிகில் பட பாடல்களைவிட, இந்த சிறுவனின் மழலை மொழியில் ஆவேசமான பேச்சுதான் இப்போது, அனைவரின் மொபைல்களிலும் ஒலிக்கிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News