Kathir News
Begin typing your search above and press return to search.

'வாக்ஷீர்':சீனாவுக்கு டஃப் கொடுக்கும் இந்திய நீர்மூழ்கி கப்பல் - சோதனையை தொடங்கிய கடற்படை..

கல்வாரி வகையின் கடைசி போர்க்கப்பலான வாக்ஷீர் நீர்மூழ்கி கப்பல் கடல் சோதனையை கப்பற்படை தொடங்கியுள்ளது.

வாக்ஷீர்:சீனாவுக்கு டஃப் கொடுக்கும்  இந்திய நீர்மூழ்கி கப்பல் -  சோதனையை தொடங்கிய கடற்படை..

KarthigaBy : Karthiga

  |  20 May 2023 10:15 AM GMT

இந்திய கடற்படை நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. இந்திய பெருங்கடல் பிரதேசத்தில் சீனா தனது இருப்பை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவும் அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் தனது கடல் சார்ந்த திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. அந்த வகையில் தான் திட்டம் 75 என்ற உள்நாட்டில் ஆறு நீர்மூழ்கிகப்பல்களைக்கட்டும் திட்டத்தை தொடங்கியது . இந்த திட்டத்தின் கடைசி நீர்மூழ்கி கப்பல் தான் வாக்ஷீர். இந்த கப்பல் கட்டும் பணி முடிந்து கடந்தாண்டு ஏப்ரல் மாதம் மசாகான் டாக் லிமிடெட் தளத்தில் தயாரானது.


இந்த கப்பலின் நீளம் 67.5 மீட்டர், உயரம் 12.3 மீட்டர், கடலின் மேற்பரப்பு மட்டத்தில் 20 கிலோமீட்டர் வேகமும், கீழே 37 கிலோமீட்டர் வேகமும் கொண்டது. 350 மீட்டர் அளவுக்கு நீருக்கு அடியில் மூழ்கும் இந்த கப்பல் எதிரிகளின் ரேடார் வளையத்தில் சிக்காது என்பது மிக முக்கிய அம்சம் .இந்த கப்பல் கண்காணிப்புக்கு ஏற்றது உலகத் தகவல்களை சேகரிக்கும். குறைந்த கதிர்வீச்சு கொண்டது. துல்லியமான வழிகாட்டப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி எதிர் மீது கடும் தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது.


இந்த நீர்மூழ்கி கப்பலின் கடல் சோதனைகளை கடற்படை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. கடல் சோதனைகள் முடிந்த பின்னர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இது இந்திய கடற்படையில் சேர்க்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போது கடலில் அதன் உந்துவிச அமைப்புகள், ஆயுதங்கள் மற்றும் சென்சாரகள் உள்ளிட்ட அனைத்து சோதனைகளை சந்திக்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News