Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து வால்மார்ட் சிறப்பு மையம்!

மெட்ராஸ் ஐ.ஐ.டி உடன் இணைந்து வால்மார்ட் சிறப்பு மையம் அமைக்கிறது.

சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து வால்மார்ட் சிறப்பு மையம்!

KarthigaBy : Karthiga

  |  1 March 2024 1:14 PM GMT

அமெரிக்காவை தளமாகக் கொண்ட உலகளாவிய சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் குளோபல் டெக், மெட்ராஸ் ஐ.ஐ.டி.யுடன் இணைந்து சிறு,குறு, நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான தொழில் நுட்பங்களை வழங்குவதற்கான சிறப்பு மையங்களை அமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விரிவான செய்தியாவது:-


உள்ளூர் தொழில் முனைவோர்களுக்கு அவர்களின் தொழில்களை பெருக்குவதற்கும் சிறு ,குறு நடுத்தர துறையின் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் தேவையான தீர்வுகளை வழங்கும் வகையில் வால்மார்ட் இச்சிறப்பு மையங்களை அமைக்கிறது .தொழில் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவை பின்பற்றுவதற்கு உதவும் அதிநவீன தீர்வுகளை உருவாக்கும் நோக்கில் இம்மையம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் டிஜிட்டல்மயமாக்கலுடன் செயல் திறன் மற்றும் லாபத்தை அதிகரிக்கவும் இது உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் வால்மார்ட்டின் தொழில்நுட்ப பிரிவான வால்மார்ட் குளோபல் டெக் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பெங்களூருவில் செயல்பட்டு வருகிறது. தற்போது அதன் இரண்டாவது பெரிய மையமாக சென்னையை தேர்ந்தெடுத்துள்ளது.


SOURCE :Kaalaimani.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News