Kathir News
Begin typing your search above and press return to search.

ஏழுமலையானை பக்கத்தில் நின்று தரிசிக்க வேண்டுமா ? ரூபாய் 20 ஆயிரம் கொடுங்க...ஜகன்மோகன் நிர்வாகத்தில் ஜரூர் வசூல் திட்டம்!!

ஏழுமலையானை பக்கத்தில் நின்று தரிசிக்க வேண்டுமா ? ரூபாய் 20 ஆயிரம் கொடுங்க...ஜகன்மோகன் நிர்வாகத்தில் ஜரூர் வசூல் திட்டம்!!

ஏழுமலையானை பக்கத்தில் நின்று தரிசிக்க வேண்டுமா ? ரூபாய் 20 ஆயிரம் கொடுங்க...ஜகன்மோகன் நிர்வாகத்தில் ஜரூர் வசூல் திட்டம்!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Sept 2019 3:09 PM IST


திருப்பதி ஏழுமலையானை மிகமிக அருகில் சென்று தரிசிக்க ரூ.20 ஆயிரத்தை கட்டணமாக நிர்ணயிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது ஆந்திராவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பதி ஏழுமலையான் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் நாடு முழுவதும் திருப்பதி ஏழுமலையான் ஆலயங்களை திருமலை-திருப்பதி தேவஸ்தானமே கட்டி வருகிறது.
இப்படி கட்டப்படும் ஆலயங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. இதற்காக நிதி திரட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலய நிர்மான டிரஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டிரஸ்ட் பல்வேறு வகைகளிலும் நிதி திரட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.


அதன் ஒரு பகுதியாக வி.ஐ.பி.க்கள் சிறப்பு தரிசன கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏழுமலையானை மிக விரைவில் தரிசனம் செய்து விட்டு செல்ல வேண்டும் என்று விரும்பும் ஒவ்வொரு வி.ஐ.பி.க்கும் தலா ரூ.20 ஆயிரம் கட்டணம் வசூலிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அந்த கட்டணத்தில் தரிசனம் செய்ய வரும் வி.ஐ.பி.க்களை மற்ற வழக்கமான வி.ஐ.பி.க்களுக்கு முன்னதாகவே தரிசனம் செய்ய வைக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் கட்டண சேவை வி.ஐ.பி.க்களுக்கு தேவையான மற்ற வசதிகளையும் செய்து கொடுக்க உள்ளனர்.
குறிப்பாக ரூ.20 ஆயிரம் கட்டணம் செலுத்தி தரிசனம் செய்ய வருபவர்கள் திருப்பதி ஏழுமலையானை அருகிலே சென்று தரிசிக்க வைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதாவது மற்ற பக்தர்கள் 3 வழிபாதையில் திரும்பி சென்று விடும் நிலையில் ரூ.20 ஆயிரம் கட்டணம் செலுத்தி வருபவர்களை குலசேகர ஆழ்வார்படி வரை அனுமதிக்க ஆலோசித்து வருகிறார்கள்.
குலசேகர ஆழ்வார்படி வரை சென்றால் திருப்பதி ஏழுமலையானை மிக மிக அருகில் சென்று தரிசிக்க முடியுமாம். விரைவில் ரூ.20 ஆயிரம் கட்டண தரிசனத்துக்கு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமும் 200 முதல் 300 பேர் வரை ரூ.20 ஆயிரம் கட்டணத்தில் ஏழுமலையானை தரிசிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். என்றாலும் நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக இவ்வளவு அருகில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதில்லை. இது கோவில் மரபாக உள்ளது. இந்த நிலையில் வசூலுக்கு ஆசைப்பட்டு வசதியானவர்களை மிக அருகில் அனுமதிப்பது அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் வசதியானவர்கள் என்ற நிலையில் மோசமான குற்றவாளிகளும், தீவிரவாதிகளும் கூட அருகில் செல்லும் வாய்ப்பு உண்டு எனவும் கூறப்படுகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News