கடையில் இதை வாங்கும் பொழுது கட்டாயம் நீங்கள் செய்யவேண்டிய செயல்கள் !
தண்ணீர் பாட்டில்களில் காலாவதி தேதியை பற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
By : Bharathi Latha
முன்பொரு காலத்தில் பயணம் மேற்கொள்ளும் பொழுது, வழியில் தாகம் எடுத்தால் அங்கு இருப்பவர்களின் வீடுகளில் தண்ணீர் வாங்கிக் தாகத்தை தணிப்பதோடு வழக்கம். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. குறிப்பாக எதை எடுத்தாலும் பணம் கேட்கும் இந்த சூழ்நிலையில் தண்ணீரைக் கூட பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டு உள்ளோம். ரயில் நிலையங்களில் இது போன்ற பல சந்தர்ப்பங்களில் நாம் காசு கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சரி நம்ம விஷயத்திற்கு வருவோம் இப்படி நீங்கள் காசு கொடுத்து வாங்கும் தண்ணீர் பின் பக்கத்தில் இருக்கும் விஷயங்களை நீங்கள் கவனித்து உள்ளீர்களா?
அப்படி இல்லையென்றால் இனிமேல் நீங்கள் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். ஆமாங்க, எவ்வளவு நாள் ஆனாலும் தண்ணீர் கெடாது என்றாலும், தண்ணீர் பாட்டிலில் இருக்கும் காலாவதி தேதி அந்த பாட்டிலுக்கானது மட்டுமே. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பிளாஸ்டிக் தண்ணீர் உடன் வினைப்புரியக்கூடும் என்பதால் தான் தண்ணீர் பாட்டில்களில் காலாவதி தேதி அச்சிடப்பட்டுள்ளது. 1987 ஆம் ஆண்டில், அமெரிக்க மாநிலமான நியூஜெர்சி தான் பாட்டில் தண்ணீர் உட்பட அனைத்து உணவுப் பொருட்களுக்கும் உற்பத்தி தேதியிலிருந்து அதிகபட்சம் 2 ஆண்டுகள் அல்லது அதற்குள் காலாவதி தேதியைக் கொண்டு இருக்க வேண்டும் என்ற சட்டத்தை இயற்றிய முதல் மாநிலம் ஆகும்.
இருப்பினும், பொதுவாக குறிப்பிட்ட காலாவதி தேதியைத் தாண்டிய பிறகு பிளாஸ்டிக் பாட்டில்களில் இருக்கும் தண்ணீரைக் குடிப்பது நல்லதல்ல என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. ஏனென்றால், காலப்போக்கில் பிளாஸ்டிக் தண்ணீரில் கசியத் தொடங்கி, ஆன்டிமோனி மற்றும் பிஸ்பெனால் A (BPA) போன்ற வேதிப்பொருட்களால் அதை மாசுபடுத்தக்கூடும். பாட்டில் தண்ணீரை நீங்கள் தினசரி குடிப்பவராக இருந்தால், இந்த பிளாஸ்டிக் கலவைகள் உங்கள் உடலில் மெதுவாகக் குவிந்துவிடும், இது குடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சுவாச செயல்பாடு ஆகியவற்றுக்கு தீங்கு விளைவிக்கும். முடிந்தவரை நீண்ட நாட்கள் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்த வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகிறது.
Image courtesy: times of India