Kathir News
Begin typing your search above and press return to search.

வயநாடு தொகுதி இடைத்தேர்தல் எப்போது? தேர்தல் கமிஷன் தகவல்!

ராகுல் காந்தியின் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது என்பது குறித்த தகவலை தேர்தல் கமிஷன் வெளியிட்டது.

வயநாடு தொகுதி இடைத்தேர்தல் எப்போது? தேர்தல் கமிஷன் தகவல்!
X

KarthigaBy : Karthiga

  |  30 March 2023 11:00 AM GMT

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்கு மே மாதம் பத்தாம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் அறிவித்தார் .அத்துடன் காலியாக உள்ள பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மக்களவைத் தொகுதிக்கும், ஒடிசாவின் ஜார்சுகுடா, உத்தர பிரதேசத்தில் சான்பே, சுவர் மற்றும் மேகாலயாவின் சோஹியாங் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கும் மே பத்தாம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.


ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பால் வயநாடு மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்தது. இது பற்றி தலைமை தேர்தல் கமிஷனர் ராஜூகுமார் கூறியதாவது:-

பிப்ரவரி மாதம் வரையில் காலியான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு மேல்முறையீடு செய்வதற்கு சூரத் கோர்ட் 30 நாள் அவகாசம் வழங்கி உள்ளது . எனவே அந்த தேர்தல் நடத்த அவசரம் இல்லை. நாங்கள் காத்திருப்போம் . விசாரணை நீதிமன்றம் வழங்கியுள்ள குறிப்பிட்ட அவகாசம் தீர்ந்துவிடும். இடைத்தேர்தலுக்கு அவசரம் இல்லை .


எனவே வயநாடு தொகுதி தேர்தல் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் . வயநாடு தொகுதி காலி என மே 23ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது .அங்கு ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் .எஞ்சிய பதவிக்காலம் ஓராண்டுக்குள் இருந்தால் இடைத்தேர்தல் நடத்தப்படும். எஞ்சிய காலம் ஓராண்டுக்கு மேல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News