உடலை டிடாக்சிஃபை செய்வது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
Ways to help your body detoxify
By : Bharathi Latha
மனித உடல் ஒரு இயந்திரத்துடன் ஒப்பிடத் தக்கது ஆகும். எந்தவொரு இயந்திரத்தையும் நல்ல நிலையில் வைத்திருக்க சரியான பராமரிப்பு தேவைப்படுகிறது. அது போல, மனித உடலுக்கும் சரியான பராமரிப்பு மற்றும் சுத்திகரிப்பு தேவைப்படுகிறது. நம் உடலை வெளிப்புறமாக எளிதில் சுத்தம் செய்துவிடலாம். ஆனால், பெரும்பான்மையான மக்களுக்கு உடலின் உட்பகுதியை சுத்தம் செய்வது குறித்து எந்தவொரு விழிப்புணர்வும் இல்லை. மேலும், அவர்கள் அதன் முக்கியத்துவத்தை அறிந்திருக்கவில்லை. இது உடலுக்கு பாதகமாக விளைகிறது. எனவே நம் உடலை டிடாக்சிஃபை செய்வது மிகவும் முக்கியமானதாகும்.
உடலில் இருந்து இத்தகைய பொருட்களை ஒழிக்க டிடாக்சிஃபிக்கேசனை மேற்கொள்ள வேண்டும். உடலை டிடாக்சிஃபை செய்யவது மிகவும் அவசியமானதாகும். டிடாக்சிஃபை செயல்முறை குறித்து எந்தவொரு விழிப்புணர்வும் இல்லாததால் மக்கள் குழப்பமடைகிறார்கள். ஆண்டுதோறும் ஒரு முறையாவது உடலை டிடாக்சிஃபை செய்வது அவசியம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இயற்கையாகவே நம் உடலை டிடாக்சிஃபை செய்வதற்கான சில எளிய நடவடிக்கைகள் உள்ளன. அவை, உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவதற்கான ஒரு இயற்கை வழி யாதெனில், அதிகாலையில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை அழிக்க, நல்ல தூக்கம் பெறுவது முக்கியமானதாகும். இரவில் நன்றாக தூங்குவது டிடாக்சிஃபிக்கேசனுக்கு உதவுகிறது. எனவே, சராசரியாக ஒரு நபர் 7 முதல் 8 மணி நேரம் அமைதியான தூக்கம் பெறுவது கட்டாயமாகும். ஒரு நல்ல தடையற்ற தூக்கத்தைப் பெறுவது எடையைக் குறைக்கவும், உடலின் உள் உறுப்புகளை டிடாக்சிஃபை செய்யவும் உதவுகிறது. குறைந்த அளவில் சர்க்கரைகளை உட்கொள்ள வேண்டும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். தவறாமல் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் இருந்து நச்சுகளை எளிதில் அகற்ற இயலும். உடலை டிடாக்சிஃபை செய்வதற்கு எளிய பயிற்சிகள் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. இப்போதெல்லாம், மக்கள் மிகவும் பரபரப்பாக இருக்கிறார்கள், இதனால் அவர்களுக்கு உடற்பயிற்சி செய்ய போதிய நேரம் கிடைப்பதில்லை. இவ்வாறு உடற்பயிற்சி செய்யாததல் மக்கள், பல நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது. உடற்பயிற்சி செய்வதன் மூலம் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க இயலும்.
Input & image courtesy:Logintohealth